»   »  ஏ.ஆர்.ரஹ்மானும், சிவாஜி பாட்டும்

ஏ.ஆர்.ரஹ்மானும், சிவாஜி பாட்டும்

Subscribe to Oneindia Tamil


சிவாஜி கணேசன் நடித்த சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான பொன்மகள் வந்தாள், பொருட்கோடி தந்தாள் என்ற பாட்டை, விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகன் படத்துக்காக ரீமிக்ஸ் செய்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

Click here for more images

தமிழ் சினிமாவில் பழைய ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் புதிய பாதை போட்டவர் ரஹ்மான். எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடலான தொட்டால் பூ மலரும் பாடலை, அதே வாலியை வைத்து ரீமிக்ஸ் செய்து, எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் நடித்த நியூ படத்தில் போட்டு பெரும் அலையை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் அத்தனை சினிமாக்காரர்களும் ஏதாவது ஒரு பழைய பாட்டை ரீமிக்ஸ் செய்து தங்களது படத்தில் போடுவது வழக்கமாகி விட்டது.

தற்போது விஜய்- ஷ்ரியா-நமிதா நடிப்பில் உருவாகியுள்ள அழகிய தமிழ் மகன் படத்திலும் இதுபோல ஒரு ரீமிக்ஸ் பாட்டைப் போட்டுள்ளார் ரஹ்மான். இம்முறை அவர் எடுத்துக் கொண்டிருப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த சொர்க்கம் படத்தில் இடம் பெற்ற பொன்மகள் வந்தாள் பொருட்கோடி தந்தாள் பாட்டை.

அந்தக் காலத்தில் இப்பாட்டு பெரும் ஹிட்டாம். எனவே மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு இப்பாட்டை தற்போதைய டிரண்டுக்கேற்ப, அதிலும் விஜய்யின் ஸ்டைலுக்கேற்ப ரீமிக்ஸ் செய்துள்ளாராம் ரஹ்மான்.

ரஹ்மானின் புத்தம் புதிய ட்யூனிலும், இசையமைப்பிலும் இப்பாடலுக்குப் புதுப் பொலிவு கிடைத்துள்ளதாம். நேற்று இப்பாடலை, திரைப்பட நகரில் செட் போட்டு விஜய், ஷ்ரியா ஆடிப் பாட பிரமாண்டமாக படமாக்கினர்.

இத்தோடு அழகிய தமிழ் மகன் படத்தின் வசனப் பகுதி முடிந்து விட்டதாம். அடுத்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை அடுத்த வாரம் தொடங்குகின்றனர்.

ஃபிரண்ட்ஸ் படத்தை வழங்கிய அப்பச்சன் தயாரிக்க, பரதன் இயக்க உருவாகியுள்ள அழகிய தமிழ் மகன், தீபாவளிக்கு விஜய் ரசிகர்களை குளிர்விக்க வருகிறதாம்.

கலக்குங்ணா!

Read more about: ar rahman

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil