ஏ.ஆர் ரஹமான் மகள் திருமண ஸ்பெஷல் போட்டோ கிளிக்ஸ்... நினைவுகளைப் பகிர்ந்து பி எச் அப்துல் ஹமீது

சென்னை: ஜிவி பிரகாஷ் மற்றும் ஏ ஆர் ரஹமான் இருவரையும் பல வருடங்களுக்கு முன்பு பேட்டி எடுத்த மிக முக்கியமான ஒரு தொகுப்பாளர் என்றால் அவர் பி. எச் அப்துல் ஹமீத் என்பது பலருக்கும் பெருமைதான்.

கணீரென்ற குரல், மிகவும் மென்மையாக பேசும் தன்மை, பிரபலங்களை அணுகும் விதம், திறமைசாலிகளை தட்டிக்கொடுக்கும் சாமர்த்தியம் போன்றவை அப்துல் ஹமீத் அவர்களுக்கு இயல்பாகவே உண்டு .

சன் தொலைக்காட்சி பல வருடங்களுக்கு முன்பு பலவிதமான திறமைசாலிகளை பேட்டி எடுத்தது. அதில் அப்துல் ஹமீத் தொகுப்பாளராக பேட்டி எடுத்த மிக முக்கியமான ஒரு பிரபலம் மிகவும் அற்புதமான ஒரு இளைஞன், இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கலைஞன் ஏ .ஆர் ரஹமான்

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே

இளமைப்பருவத்தில் கொடுத்த அந்த பேட்டி இன்றுவரை இணையதளங்களில் மிகவும் பிரபலம். அதுமட்டுமல்லாமல் அந்தப் பேட்டியின் நடுவே ஜிவி பிரகாஷ் பாடிய ஜென்டில்மேன் திரைப்படத்தின் பாடல் பலருக்கும் ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல். ""சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது கலக்குது பார் இவ ஸ்டைல்" என்று மழலை மனம் மாறாமல் ஜிவி பிரகாஷ் பாடியது யாராலும் மறக்க முடியாது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ரகுமான் விட்டு திருமணவிழாவில் B .H அப்துல் ஹமீது கலந்து கொண்டு மலரும் நினைவுகளை முகப்புத்தகத்தில் பதிவு செய்தார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு

27 ஆண்டுகளுக்கு முன்பு

அவர் கூறியது என்னவென்றால்.. A.R.Rahman அவர்களது அன்பு மகள் கதீஜாவின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட மகிழ்வினை முகநூல் நேச நெஞ்சங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ரஹ்மானின் திருமணத்தில் தம்பதி சமேதரராகக் கலந்து கொண்ட நினைவும் வந்தது. ரஹ்மானின் வாரிசு அமீனைப் பார்க்கும் போது முதன்முதலாக ரஹ்மானைச் சந்தித்த நினைவும் வந்துபோனது.

கலைஞர்களது கலைவாழ்வின் ஆரம்பம்

கலைஞர்களது கலைவாழ்வின் ஆரம்பம்

தமிழில் ரஹ்மானுடனான முதலாவது தொலைக்காட்சிப் பேட்டியைப் பதிவு செய்த போது(1993 டிசம்பர்) அவருக்கு வயது 27. அந்த நிகழ்ச்சியில் 7வயது சுட்டிப் பையனாகக் கலந்துகொண்ட G.V.பிரகாகாஷையும் 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தபோது, இத்தகைய கலைஞர்களது கலைவாழ்வின் ஆரம்பத்தில் நானும் ஒரு வழிப்போக்கனாய் இவர்களோடு பயணத்திருக்கிறேன் என்ற நிறைவு மனதிற்கு இதம் தந்தது என்று B .H அப்துல் ஹமீது கூறி உள்ளார்.

கதீஜா திருமணத்தில் பி.எச்.அப்துல் ஹமீத்

கதீஜா திருமணத்தில் பி.எச்.அப்துல் ஹமீத்

ஏ ஆர் ரகுமான் குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பி எச் அப்துல் ஹமீது மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளனர் . அவர்கள் இல்ல விசேஷங்களில் கண்டிப்பாக இவருக்கு ஒரு சிறப்பு அழைப்பு நிலைத்து இருக்கும். எத்தனை வருடங்கள் ஓடினாலும் ஒரு தொகுப்பாளராக மட்டும் பார்க்காமல் குடும்பத்தின் நலம் விரும்பியாக கருதி அப்துல் ஹமீத் அவர்கள் மீது கொண்ட பாசம் மற்றும் மரியாதை நிமித்தம் போன்றவை காலம் கடந்தும் நிற்கிறது. இத்தனை வருடங்கள் ஓடிய பிறகும் ஏ ஆர் ரஹமான் மகள் கதீஜா திருமணத்தில்

பி.எச்.அப்துல் ஹமீத் கலந்து கொண்டதும் பல பொக்கிஷமான நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டதும் பலருக்கும் சுவாரசியமாக இன்று வரை இருக்கிறது. பல ரசிகர்கள் b.h அப்துல் ஹமீது மீது மரியாதை கொண்டு அவருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இணையதளத்தில் பலவிதமான கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர். நல்ல நட்பும் நன்மதிப்பும் நீடித்து நிற்க வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X