twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழா தமிழா நாளை நம் நாளே.. சுதந்திர தீயை வளர்த்த ஏ.ஆர். ரஹ்மானின் தேசப்பற்று பாடல்கள் இதோ!

    |

    சென்னை: ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும்போதே, "தமிழா தமிழா நாளை நம் நாளே" என சுதந்திர தாகத்துடன் தொடங்கிய இசைப்பயணம் இன்னமும் தீராத பல தாகங்களுடன் வேட்கைகளுடன் நதிபோல ஓடிக் கொண்டிருக்கிறது.

    தேசப்பற்று பாடல்கள் என்றாலே புல்லரிக்க வைக்கும் இசையால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் மேஜிக்கை நன்கு கற்று வைத்திருப்பவர் ரஹ்மான்.

    தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை தனது இசையால் விரைவில் கொடுக்கவும் காத்திருப்பதாக அண்மையில் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிய போது கூறி இருந்தார்.

    ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த தேசப்பற்று பாடல்களை இங்கே காண்போம்..

    நிஜ போராளிகள்.. இந்த சுதந்திர தினத்தை சுகாதார ஊழியர்களுக்கு சமர்பிப்போம்.. அமிதாப் பச்சன் உருக்கம்!நிஜ போராளிகள்.. இந்த சுதந்திர தினத்தை சுகாதார ஊழியர்களுக்கு சமர்பிப்போம்.. அமிதாப் பச்சன் உருக்கம்!

    தமிழா தமிழா

    தமிழா தமிழா

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஏ.ஆர். ரஹ்மான். படத்தின் கதை ஜம்மு காஷ்மீரை சுற்றியும், தீவிரவாதிகளை சுற்றியும் நகர்கிறது. அந்த படத்திற்கு ஒரு பாடலை போட, மகாகவி பாரதியாரின் வரிகளை எடுத்துக் கொண்டு, "தமிழா தமிழா நாளை நம் நாளே.. தமிழா தமிழா நாடும் நம் நாடே" என சுதந்திர தீயை பற்ற வைத்த பாடலை இசையமைத்து பல இதயங்களை வென்றார் ரஹ்மான்.

    அச்சம் அச்சம் இல்லை

    அச்சம் அச்சம் இல்லை

    சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்திரா படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த "இனி அச்சம் அச்சம் இல்லை" பாடல் ஏகப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி சுதந்திர விழாக்களில் பாடப்படும் ஒரு பாடலாக பல காலமாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையையும், அடிமை எண்ணம் இல்லை என்ற உணர்வையும் வளர்த்து வருகிறது. வைரமுத்து வரிகளில் உருவான இந்த பாடலை, சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், ஜி.வி. பிரகாஷ், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

    கப்பலேறி போயாச்சு

    கப்பலேறி போயாச்சு

    கமல்ஹாசனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் கம்போஸ் பண்ண இந்த "கப்பலேறி போயாச்சு" பாடல் ஹிட்டாகுமா? என்ற சந்தேகம் உலகநாயகனுக்கே இருந்துள்ளதை அண்மையில் நடந்த இருவரது இண்ட்ராக்‌ஷன் மூலம் பலரும் அறிந்து கொண்டனர். ஆனால், இந்தியன் படத்திற்காக ரஹ்மான் போட்ட இந்த பாடல் வேற லெவலில் ஹிட்டானது அனைவரும் அறிந்த ஒன்றே.

    விடை கொடு எங்கள் நாடே

    விடை கொடு எங்கள் நாடே

    மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடம்பெற்ற "விடை கொடு எங்கள் நாடே" பாடல் ஈழத் தமிழர்களின் சுதந்திர தாக பாடலாகவும், அவர்களது வலிகளை பதிவு செய்த பாடலாகவும் அமைந்திருந்தது. மேலும், அந்த படத்தில் இடம்பெற்ற "வெள்ளைப் பூக்கள்" பாடல் அமைதிக்கான தேசிய கீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜன கண மண

    ஜன கண மண

    சூர்யா, மாதவன், சித்தார்த், பாராதிராஜா, மீரா ஜாஸ்மின், திரிஷா, இஷா தியோல் என மஸ்டி ஸ்டாரர் படமாக இயக்குநர் மணிரத்னம் உருவாக்கிய ஆயுத எழுத்து படத்திற்காக வைரமுத்து வரிகளில் ரஹ்மான் போட்ட ஜன கண மண பாடல் இளைஞர்கள் நெஞ்சில் சுதந்திர தீயை வளர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தது. பல்வேறு கல்லூரிகளில் இந்த பாடல், சுதந்திர தின விழாக்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு பயன்பட்டு வருகிறது. தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஏகப்பட்ட சுதந்திர தாகத்தை வளர்க்கும் நாட்டுப்பற்று பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    AR Rahman’s top 5 patriotism songs in tamil list is here for to enjoy the 74th Independence Day with pride and respect.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X