twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

    By Shankar
    |

    திராவிட இயக்க அரசியலின் பிதாமகனாகப் போற்றப்படும் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், தமிழக முன்னாள் முதல்வர், கட்சி பேதமின்றி கொண்டாடப்படும் அரசியல் ஆசான் சி.என்.அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

    அறிஞர் அண்ணா

    அறிஞர் அண்ணா

    இப்படத்திற்கு ‘அறிஞர் அண்ணா' என பெயரிட்டுள்ளனர். திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வேள் கதிவரன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசையமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    கருணாநிதி

    கருணாநிதி

    சி.என்.அண்ணாத்துரையின் வளர்ப்பு மகனான அண்ணா பரிமளம் மற்றும் பேரன் மலர் வண்ணன் பரிமளம் இருவரும் இணைந்து கதை, வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி வேடங்களில் நடிப்பவர்கள் தேர்வாகி விட்டனர்.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    அண்ணா வாழ்க்கையில் கருணாநிதிக்கு நிகரான முக்கியத்துவம் கொண்ட, அண்ணாவின் இதயக்கனியான எம்ஜிஆர் வேடத்தில் நடிக்க, அவரது முகசாடை கொண்ட நடிகரைத் தேடி வருகிறார்கள்.

    பெரியார்

    பெரியார்

    அண்ணாவின் பொது வாழ்க்கையில் அவரோடு பணியாற்றிய தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜி, மதியழகன், இவிகே சம்பத் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

    அண்ணா, கருணாநிதி பாத்திரங்கள் இடம்பெறும் காட்சிகள் மட்டும் இப்போது படமாகி வருகின்றன.

    ஏற்கெனவே பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு அவர்கள் பெயரிலேயே படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Two debutant film makers are engaging in making late CM CN Annathurai's life history in the name of Arignar Anna.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X