ஸ்பெஷல்ஸ்

By Staff

படமே வராவிட்டாலும், வந்து ஓடாவிட்டாலும் கூட மற்றவர்களுடன் சண்டை போடாமல் அர்ஜூனுக்கு தூக்கம்வராது போலிருக்கிறது.

இவரை வைத்து இயக்கப் போன பல டைரக்டர்கள் தங்களது சான்ஸ்களை இழந்துள்ளனர். தயாரிப்பாளர்களிடம்பேசி படத்தை நானே டைரக்ட் செய்துர்றேனே, எதுக்கு வெட்டியா டைரக்டர் செலவு என்று கூறி பலரது வாழ்வில்விளையாடியுள்ளார்.

இவ்வாறு டைரக்டர் சான்ஸை பறித்த படங்களில் எல்லாம் ஆர்டிஸ்ட் சம்பளத்திலும் இவர் கையை வைத்துவிடுவார் என்கிறார்கள்.

மேலும் படத்தின் அனைத்து விஷயங்களிலும் இவரது தலையீடு இருக்கும்.

இவர் மீது வெரும் வெறுப்பில் இருந்தாலும் அதை இதுவரை யாரும் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை.இதனால் பிரச்சனை வெடித்தது இல்லை.

இந் நிலையில் அர்ஜூன்- சிம்ரன் நடித்து வரும் ஒற்றன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

சிலகாட்சிகள் மட்டுமே சுட வேண்டியதிருக்கிறதாம். ஆனால், தனது வேலையை இசையமைப்பாளர் பரத்வாஜிடம்போய் காட்ட, அவர் படத்தில் இருந்தே வாக்-அவுட் செய்துவிட்டார் என்கிறார்கள்.

சில பாடல்கள் மற்றும் பேக்கிரவுண்ட் மியூசிக் குறித்து பரத்வாஜுக்கே அர்ஜூன் அட்வைஸ் செய்ய ஆரம்பிக்க,அப்செட் ஆகிப் போன பரத்வாஜ் இந்த ஆட்டத்துக்கே நான் வரவில்லை என்று கூறி விட்டு படத்திலிருந்துவெளியேறிவிட்டாராம்.

இப்போது ரீ-க்கார்டிங் மட்டுமே பாக்கி என்ற நிலையில் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தமிழ்சினிமாவின் ஹிட் சாங்க்ஸ தந்து வரும் பரத்வாஜ் படு பிஸியாக தனது மற்ற பட வேலைகளைப் பார்க்கஆரம்பித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X