»   »  தெளிவானார் ஆர்த்தி அகர்வால்!

தெளிவானார் ஆர்த்தி அகர்வால்!

Subscribe to Oneindia Tamil

பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கொஞ்ச நாளைக்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய ஆர்த்தி அகர்வால் இப்போது தேறி விட்டார். ஒரு சேஞ்சுக்காகதமிழில் ஒரு படத்தில் இவர் நடிக்கப் போகிறாராம்.

தெலுங்கு நடிகர் தருணைக் காதலிப்பதாக கிளம்பிய வதந்திகளைத் தொடர்ந்து, பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பைக் கிளப்பினார் ஆர்த்தி.ஹைதராபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறிய ஆர்த்தி வீடு திரும்பினார்.

சொந்த ஊர் வடக்கே என்றாலும், தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஆர்த்தி அகர்வால், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையாக(த்ரிஷா கால் பதிப்பதற்கு முன்பு) இருந்து வந்தவர்.

தருணுடன் காதல் என்ற வதந்தி கிளம்பியதைத் தொடர்ந்து இன்னும் முன்னணிக்கு வந்தார். இப்போது தற்கொலை முயற்சிக்குப் பின்னர் அவருக்குப் பட வாய்ப்புகள்குறைந்து விட்டதாம். இருந்தாலும் ஆர்த்தி கவலைப்படவில்லை. அதான் இருக்கிறதே கோலிவுட்!

இப்போது ஸ்ரீகாந்த்துடன், "பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் புக் ஆகியுள்ளார் ஆர்த்தி. இதில் காமடி வேடத்தில் கலக்கப் போகிறாராம். ஸ்ரீகாந்த்தும் முதல் முதலாகமுழு நீள காமடி வேடத்தில் இதில் நடிக்கிறார்.

பம்பரக் கண்ணாலே ஹிட் ஆனால் கொஞ்ச நாளைக்குத் தமிழில் நடிக்கப் போவதாக ஆர்த்தி அகர்வால் தரப்பு கூறுகிறது. இதன் காரணமாக, இப்படத்தில் முழு ஈடுபாடுகாட்டி நடிக்கப் போகிறாராம் ஆர்த்தி.

அடி ஆ(ர்)த்தி!

Read more about: arthi agarwal in kollywood
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil