'அஞ்சாதே' ஆன 'ஆறுவது சினம்'
மிஷ்கின் இயக்க, நரேன் நடிக்க உருவாகும் ஆறுவது சினம் படத்தின் பெயர் தற்போது அஞ்சாதே என்று மாற்றப்பட்டுள்ளது.
| Click here for more images |
சித்திரம் பேசுதடி மூலம் இயக்குநரானவர் மிஷ்கின். இப்படத்தில்தான் நரேனும், பாவனாவும் தமிழுக்கு அறிமுகமானார்கள்.
பெரும் ஓட்டம் ஓடிய இப்படத்தைத் தொடர்ந்து நரேனும், மிஷ்கினும் மீண்டும் கை கோர்த்துள்ளனர். இப்படத்துக்கு முதலில் சத்யசோதனை என்று பெயரிட்டனர். பிறகு ஆறுவது சினம் என்று மாற்றம் செய்தனர். தற்போது அஞ்சாதே என்று மாற்றி விட்டனர்.
ஆறுவது சினம் என்ற பெயரை ஏற்கனவே தயாரிப்பாளர் கவுன்சிலில் நடிகர் மணிவண்ணன் பதிவு செய்து வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து பாதியிலேயே நின்று போனது.
இது மிஷ்கினுக்குத் தெரிய வர தனது படத்தின் பெயரை அஞ்சாதே என்று மாற்ற முடிவு செய்தாராம்.
படத்தில் இன்னும் இரு ஹீரோக்களும் உள்ளனர். ஒருவர் பிரசன்னா, இன்னொருவர் அம்ஜத். இவர்களுக்கும் படத்தில் முக்கிய கேரக்டர்களாம்.
இப்படத்தில் நரேன் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நரேன். தனது முதல் படத்தில் ரவுடியாக வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஹீரோயின் ரோலுக்கு பாவனாவை அணுகினாராம் மிஷ்கின். ஆனால் தமிழ், தெலுங்கில் பாவனா படு பிசியாக இருப்பதால் கால்ஷீட் தர முடியாத நிலை. இதனால் பாவனா இப்படத்தில் இல்லையாம்.


Click it and Unblock the Notifications











