அரை டவுசரோடு வந்து அதிர்ச்சி தந்த ஆர்யா!

நேற்று சென்னையில் நடந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் நடிகர் ஆர்யா. படத்தின் நாயகன் ஜீவா. (இருவரும் ரொம்ம்ம்ப தோஸ்தாம். இதனால் ஒருவர் விழாவை இன்னொரு மிஸ் பண்ணாமல் மெயின்டெய்ன் பண்ணுகிறார்கள்.)
முழங்காலுக்கு மேல் நிற்கும் அரைக்கால் சட்டையும் தொப்பியுமாக, 'பாத்ரூமிலிருந்து அவசரமா ஓடியாந்திருப்பாரோ' என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு வந்திருந்தார்.
அவரைப் பேச அழைத்தபோது, பார்வையாளர்கள் 'அரை டவுசர்' என்று கூச்சலிட, "நான் துபாய் கிரிக்கெட் விழாவுக்குப் போயிட்டு அப்படியே ஏர்போர்ட்லருந்து நேரா இங்க வர்றேன். அதான் டிரஸ் மாத்திக்கக் கூட நேரமில்லை.." என்றார்.
'அப்ப துபாய்ல அரை டிராயர்லதான் அலைஞ்சிக்கிட்டிருந்தாரோ', என்று பதிலுக்கு பார்வையாளர் பக்கமிருந்து குரல் வர சங்கடத்தில் நெளிந்தபடி டாபிக்கை மாற்றினார்!
Comments


Click it and Unblock the Notifications