twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மயக்கும் மந்திரம் குரலுக்கு சொந்தக்காரி ஆஷா போஷ்லே…டாப் 5 ஹிட் சாங்!

    |

    மும்பை : மயக்கும் மாயாஜாலக்குரலுக்கு சொந்தக்காரியான பின்னணிப் பாடகி ஆஷா போஷ்லே இன்று தனது 89வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

    தமிழ் உட்பட இந்தியாவின் 11 மொழிகளில் ஆஷா போஷ்லே முன்னணி பாடகியாக இன்றும் வலம் வருகிறார். பாலிவுட் பாடகியான ஆஷா போஸ்லே தமிழில் பாடி ஹிட்டடித்த சில பாடல்களை பார்க்கலாம்.

    பிக்பாஸ் சீசன் 5 தமிழ்...களமிறங்க போகும் போட்டியாளர்களின் முதல் பட்டியல் இது தானா ? பிக்பாஸ் சீசன் 5 தமிழ்...களமிறங்க போகும் போட்டியாளர்களின் முதல் பட்டியல் இது தானா ?

    ஆஷா போஸ்லே

    ஆஷா போஸ்லே

    ஆஷா போஸ்லே சாங்லியில் உள்ள கோர் எனும் சிறிய குக்கிராமத்தில் 1933ம் ஆண்டு பிறந்தார்.தந்தை மராத்திய இசை மேதையான பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் ஆவார். ஆஷாவுக்கு ஒன்பது வயது இருக்கும் போதே, அவரது தந்தை காலமானார். இதையடுத்து, அவரது மூத்த சகோதரியான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா குடும்பத்தைப் பேணுவதற்காக திரைப்படங்களில் நடிக்கவும் பாடவும் துவங்கினார்கள்.

    இசைப்பயணம்

    இசைப்பயணம்

    1943ம் ஆண்டு தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, கர்நாடக இசை, கஜல், பஜனைப் பாடல்கள், பாப் இசை என பல்வேறு வகை பாடல்களை பாடியுள்ள ஆஷா போஷ்லே, தமிழ் திரைப்படங்களிலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.

    இரண்டுமுறை தேசிய விருது

    இரண்டுமுறை தேசிய விருது

    இரண்டு முறை சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும், நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா விருது,லதா மங்கேஷ்கர் விருது, ஸ்கிரீன் வீடியோகான் விருது என ஏராளமான விருதுகளை குவிந்துள்ளார். தமிழ் உட்பட இந்தியாவின் 11 மொழிகளில் ஆஷா போஷ்லே முன்னணி பாடகியாக இன்றும் வலம் வருகிறார். பாலிவுட் பாடகியான ஆஷா போஸ்லே தமிழில் பாடி ஹிட்டடித்த சில பாடல்களை பார்க்கலாம்.

    செண்பகமே செண்பகமே

    எங்க ஊர் பாட்டுக்காரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில், செண்பகமே செண்பகமே பாடலை தனது இனிமையான குரலில் பாடி நம்மை வசியம் செய்திருப்பார் ஆஷா. ஆஷா போஸ்லேவுக்குக் தமிழின் கடைக்கோடி ரசிகர்கள் வரை ஆஸ்தி சேர்த்தது இந்த பாடல், அந்தக் காலத்து றெக்கோர்டிங் பார்களில் இந்தப் பாடல் சுப்ரபாதம். இதையே மனோ, சுனந்தா சந்தோஷ மெட்டுகளிலும் பாடியிருப்பர்.

    ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை

    ஓ பட்டர்ஃப்ளை ஓ பட்டர்ஃப்ளை" பாடல் ஆஷா போஸ்லேவுக்குத் தமிழில் இன்னுமொரு உச்சம் கொடுத்த பாட்டு. பட்டர் மாதிரி வழிந்தோடும் வரிகளை பட்ட்டர்ர்ர் என்று பகிர்ந்திருப்பார். மீரா படத்தில் இந்தப் பாட்டோடு இன்னும் இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்த பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

    சாத்து நடை சாத்து

    சேதுபதி ஐ.பி.எஸ் படத்தில் வரும் சாத்து நடை சாத்து இந்தப் பாட்டை ஆஷா போஸ்லே பின்னியிருப்பார். அந்த கோரஸ் குரல்கள் கொடுக்கும் ஜும் ஜக்கு ஜும் ஜக்கு ஜக்கு ஆஷாவின் நளினமான குரலும் ஆத்தாடி எத்தனை முறைவேணும்னாலும் இந்த பாட்டை கேட்கலாம்.

    நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

    ஹேராம் இசையில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமைச் சேர்த்த உறவுக்கொரு நன்றி என்ற ஹே ராம் படத்தின் பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஆஷா போஸ்லேவுக்கு முத்தாய்ப்பாய் அமைந்த பாட்டு. ஹரிஹரனின் கூட்டும் கச்சிதமான பாட்டு ஜோடியாக அமைந்து சிறப்பிக்கும்.

    கொஞ்சே நேரம் கொஞ்ச

    சந்திரமுகி திரைப்படத்தில் இடம் பெற்ற கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாடல் ஆஷா போஸ்லேவின் குரலில் கொஞ்சி கொஞ்சி நழுவி இருக்கும், எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்றாக இப்பாடல் இருக்கும்.

    English summary
    Legendary singer, Asha Bhosle is evergreen in terms of her grace and her scintillating voice. she celebrates her birthday on September 8.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X