உலகின் பிரபலமான மலையாளியாக நடிகர் மம்முட்டி தேர்வு
துபாய்: உலகிலேயே புகழ் பெற்ற மலையாளியாக நடிகர் மம்முட்டியை தேர்வு செய்துள்ளது துபாயைச் சேர்ந்த ஏசியன் தொலைக்காட்சி நிறுவனம்.
ஏசியன் தொலைக்காட்சி 2010 விருதுகளுக்கான தேர்வு ஏசியன் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டது. இதில் உலகப் புகழ்பெற்ற மலையாளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் மம்முட்டி.
நடிகர் மோகன்லால் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற ரெசூல் பூக்குட்டி ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் மம்முட்டி.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மம்முட்டி, இது போன்று நடிகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விருதுகள் மலையாள திரையுலகில் உள்ள பிற திறமைசாலிகளில் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தகர்க்கக் கூடியதாக நான் கருதுகிறேன்.
பல்வேறு தரப்புகளில் எழும் சர்ச்சைகளால் உலக அளவில் மலையாள மக்களின் புகழ் பாதிக்கப்படவில்லை. மலையாளியாக பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
56 வயதாகும் மம்முட்டி மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக பல ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தவிர தமிழிலும் நிறையப் படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











