»   »  சூர்யாவை விரட்டும் ஆசின்!

சூர்யாவை விரட்டும் ஆசின்!

Subscribe to Oneindia Tamil

சூர்யாவை ஆசின் விடுவதாகத் தெரியவில்லை. வாரணம் ஆயிரம் படத்தில் ஜோடிபோட முடியாமல் போனதால் மனம் தளராத அவர் இப்போது ஹரி இயக்கத்தில் சூர்யாநடிக்கும் வேல் படத்தில் தோள் சேர துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

கஜினி படத்தில் சூர்யாவுடன் ஜோடி போட்டார் ஆசின். படம் சூப்பர் ஹிட், சூர்யா,ஆசினின் நடிப்போ மெகா ஹிட் ஆனது. இந்தப் படத்தின் மூலம் சூர்யாவுடன்நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார் ஆசின்.

அடுத்தடுத்து சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து அசத்தவும் தயாராக இருந்தார். ஆனால்சூர்யாவின் அப்போதைய காதல் நாயகியும், இப்போதைய மனையாட்டியுமானஜோதிகா அதற்கு ஆப்பு வைத்து விட்டார்.

சமீபத்தில் கெளதமின் வாரணம் ஆயிரம் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.சூர்யா நடிக்க உருவாகும் இப்படத்தில் ஆசின்தான் முதலில் நாயகியாக முடிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஆனால் அதற்கு ஜோதிகா ஆட்சேபம் தெரிவித்ததால் ஆசின் நீக்கப்பட்டு ஆண்ட்ரியாநாயகியாக்கப்பட்டார். இதனால் அப்செட் ஆகிப் போனார் ஆசின். இருந்தாலும் அவர்மனம் தளர்ந்து விடவில்லை.

இந்த நிலையில் ஆறு படத்தைத் தொடர்ந்து ஹரியும், சூர்யாவும் இணைய வேல் என்றபுதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை ராஜகாளியம்மன் மூவிஸ் தயா>க்கிறது.ஆறு படத்தைப் போல இதுவும் ஆக்ஷன் படமாம். இதில் சூர்யாவின் நடிப்பை புதுப்ப>மாணத்தில் காட்டப் போகிறாராம் ஹரி.

இதை அறிந்த ஆசின், இப்படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என்றுதனக்கே உரிய பாணியில் பிரம்மப் பிரயத்தன முயற்சிகளைத் தொடங்கினார்.

ஹரியை நேரடியாகத் தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டார் ஆசின். ஆசினை நடிக்கவைக்க ஹரிக்கு ஆர்வம் இருந்தாலும் சூர்யாவைக் கேட்காமல் முடிவு செய்ய அவர்விரும்பவில்லை. ஆனால் சூர்யாவின் நிலைதான் தெரிந்ததாயிற்றே! எனவேஆசினுக்கு அவர் பச்சைக் கொடி காட்டுவாரா என்பது சந்தேகம்தான்.

இந் நிலையில் ஹரியை இன்னொரு கேர்ளும் கால் பண்ணி வாய்ப்பு கேட்டுள்ளார்.அவர் வேறு யாருமல்ல, சிவாஜி நாயகி ஷ்>யாதான். உங்க படத்துல நடிக்க வாய்ப்புதரக் கூடாதா, நேரில் வரட்டுமா என்று உரிமையோடு அவர் அப்ளிகேஷன்போட்டுள்ளாராம்.

இரு நாயகிகளும் தன்னுடன் ஜோடி போட போட்டா போட்டியில் இறங்கியிருப்பதால்அய்யய்யோ வம்பாப் போச்சே என்று எதையும் கண்டுகொள்ளாமல் கமுக்கமாகஇருக்கிறாராம் சூர்யா.

ஹரிதான் இருவரிடமும் சிக்கி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இரு தலைபாம்பு போல பரிதவித்து வருகிறாராம்.

ஷ்ரியாவை விட ஆசின்தான் வாய்ப்பைப் பிடிப்பதில் கடுமையாக மோதிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி இரு நாயகிகளுக்கும் ரெட் காட்டி விட்டு வேறுநாயகிக்கு வேல் யூனிட் தாவக் கூடும் என்று கூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil