»   »  ஆழ்வார் ஆப்பம், போக்கிரி சிக்கன்!

ஆழ்வார் ஆப்பம், போக்கிரி சிக்கன்!

Subscribe to Oneindia Tamil

நதியா தோடு, குஷ்பு இட்லி வரிசையில் புதிதாக ஆழ்வார் ஆப்பம், போக்கிரி சிக்கன் என பதார்த்தங்களுக்குஆசின், அஜீத், விஜய் நடித்த படங்களின் பெயர்களைச் சூட்டி கலாய்த்துள்ளனர் சென்னையில்.

குஷ்பு படு பிரபலமாக இருந்தபோது அவருக்கு கோவில் கட்டி புளகாங்கிதமடைந்தனர் சில திருச்சிபுண்ணியவான்கள். பிறகு மெத்து மெத்தென இருக்கும் இட்லிகளுக்கு குஷ்புவின் பெயரை சூட்டி சுவைத்துச்சாப்பிட்டனர்.

அந்த வரிசையில் ஆசின் நடித்த படங்களின் பெயர்களை உணவுப் பதார்த்தங்களுக்குச் சூட்டிய அக்கப்போர்சமீபத்தில் சென்னையில் நடந்தது.

சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் ஆசின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போதுஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வகைகளைப் பார்வையிட்ட ஆசின் அசந்து போனார். காரணம் அவர் நடித்தபடங்களின் பெயர்களில் உணவு வகைகள் இருந்ததால்தான்.

போக்கிரி சிக்கன், ஆழ்வார் ஆப்பம், மஜா ஃபிஷ் ஃபிரை, அன்னாவரம் ஆலு (இது ஆசின் நடித்ததெலுங்குப் படம்), சிவகாசி ஜாமூன் என அசத்தியிருந்தனர். இந்த வித்தியாசமான பெயர்களை ரசித்தநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஆப்பத்தைத்தான் வாங்கி வாங்கி உள்ளே தள்ளினர்.

ஆசினுக்கும் ஆப்பம்தான் பிடித்திருந்ததாம். சுடச் சுட இருந்த ஆப்பத்தை சப்புக் கொட்டிச் சுவைத்துச் சாப்பிட்டுசூப்பர் என்றார்.

நமீதாவை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் என்னென்ன பெயர் வைப்பார்களோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil