»   »  சேராமலே போன சிம்பு-ஆசின்!

சேராமலே போன சிம்பு-ஆசின்!

Subscribe to Oneindia Tamil

சேட்டைக்கார சிம்புவும், நாட்டி கேர்ள் ஆசினும் சேர்ந்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிப்பதாக இருந்த ஏ.சி என்ற படம்எடுக்கப்படாமலேயே டிராப் ஆகி விட்டது.

பி.எப் என்ற பெயரில் ஆரம்பித்து பலத்த சர்ச்சையால் அதை அன்பே ஆருயிரே என மாற்றினார் எஸ்.ஜே. சூர்யா. அந்தப் படம் பெரும் சர்ச்சையில்சிக்கி ஒரு வழியாக வெளியானது. அதில் நிலாவை குளுகுளுவெனக் காட்டியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது தோஸ்து சிம்புவுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணும் ஐடியாவில் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இருவரும் அப்போதுநெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

படத்துக்கு ஏசி என்று பெயரும் சூட்டியிருந்தார் சூர்யா. ஆசின்தான் நாயகி. படத்தில் சிம்புவுக்கு ஏழுமலை என்று பெயர், ஆசினுக்கு சித்ரா என்றுபெயர்.

கதையும் ரெடி, ஆர்ட்டிஸ்டுகளும் ரெடி, போட்டோ செஷனைக் கூட நடத்தி முடித்து விட்டனர். ஆனால் படம் என்ன காரணத்தினாலோ டிராப் ஆகிவிட்டது.

படம் டிராப் ஆனாலும் கூட ஸ்டில்களில் ஆசின் கொடுத்துள்ள போஸ்கள் படு ஜில்லாக இருக்கிறது. அதிலும் சிவப்பு கலர் வேட்டி, சட்டையில்ஆசின், படு ப்ரீஸியாக இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆசினுடன் ஏற்பட்ட நட்பை வைத்துத்தான் தனது திருமகன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார் சூர்யா. ஆனால் வர முடியாது என்றுமறுத்து விட்டாராம். இப்போது மீரா ஜாஸ்மின் ஜோடி போட்டுள்ளார் என்பது தெரிந்தது தானே!

இந்தப் படத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வேலை ஒரு பக்கம் நடக்கிறதாம். வந்தா பார்ப்போம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil