»   »  சகலகலா ஆசின்

சகலகலா ஆசின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சகலகலாவல்லவனுடன் நடிக்கும் ஆசினும் சாமானியமான ஆள் அல்ல. அவரும் ஒரு சகலகலாவல்லியாகத்தான் இருக்கிறார்.

நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக கேரளத்தில் கலக்கிக் கொண்டிருந்தவர் ஆசின். தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து அப்படியே தமிழுக்குஷிப்ட் ஆகி இப்போது தமிழிலும், தெலுங்கிலுமாக மாறி மாறி கல்லாக் கட்டி வருகிறார் ஆசின்.

கை நிறையப் படங்களுடன் படு பிசியாக உள்ள ஆசின் பல துறை நிபுணியாக இருக்கிறார். வெற்றிகரமான தொழிலதிபராக மட்டும் இல்லாமல்,ஏகப்பட்ட மொழிகளையும் கரைத்துக் குடித்துள்ளார்.

தாய் மொழி மலையாளம், பிழைப்பு மொழி தமிழ், தெலுங்கு, அப்புறம் இந்தி, சமஸ்கிருதம், அன்னிய பாஷையான பிரெஞ்சு, லிங்க் லாங்குவேஜ்ஆங்கிலம் என 7 மொழிகளில் பேசத் தெரியுமாம் ஆசினுக்கு.

மேலும் பரத நாட்டியத்தையும் வெஸ்டர்ன் டான்ஸையும் முறைப்படி கற்ற ஆசினுக்கு இப்போது குத்தாட்டமும் நன்றாகவே வருகிறது.

14 வயதில் மாடலிங்குக்கு வந்த ஆசின், குறுகிய காலத்திலேயே கல்லாப் பெட்டியை நிரப்பிவிட்டார். இப்போது தான் அவருக்கு 21 வயதாகிறதாம்,அதாவது சிம்புவை விட சின்னப் பொண்ணு ஆசின் (அம்பிக்கு வயசு 22).

அப்புறம் ஆசினின் அறுவர் படையைப் பத்தி சொல்லியாக வேண்டும். 6 பேர் கொண்ட இந்தப் படை எப்போதும் ஆசினின் நிழலாக கூடவேவருகிறது.

ஆசினுக்கு மேக்கப் மேன், டச்சப் பாய், டிரைவர் உள்பட 6 பேர் உதவியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு ஒரே மாதிரியாக டிரஸ் போடவேண்டும் என அறிவுறுத்தியுள்ள ஆசின் சீருடைகளையும் கொடுத்துவிடுகிறார். அத்தோடு ஒரே மாதிரியான பெல்ட், ஷூ போட்டுக் கொண்டுஇந்தப் படை ஆசினோடு வலம் வருகிறது.

இவர்களுக்கு ஆசினிடம் மட்டும்தான் வேலை. வேறு எங்கும் இவர்களுக்கு வேலை கிடையாது. மற்ற நடிகைகளிடம் பணியாற்றுபவர்கள் எல்லாம்வேறு நடிகைகளுக்கும் போய் மேக்கப் போட்டு விட்டு, டச்சப் செய்து விட்டு வருவார்கள். ஆனால் ஆசினிடம் உள்ள 6 பேரும் பெர்மெனன்டாகஇவருடனேயே வேலையில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு நல்ல சம்பளமும் தருகிறாராம்.

இத்தனை திறமைகள் இருந்தும், அழகு இருந்தும் ஆசினிடம் ஒரு சின்ன மனக்குறையும் இருக்கிறதாம். கஜினிக்குப் பிறகு தனக்கு நடிப்புக்கு தீனிபோடும் வகையிலான படம் அமையவில்லை என்று செல்லமாக புலம்புகிறார் ஆசின்.டைரடக்கர்களே, ஆசின் ஆசையை கவனிங்கய்யா!

Read more about: a breif on actress asin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil