மும்பையில் குடியேறும் அசின்

By Staff

எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கொச்சியில் இருந்து குச்சி மாதிரி கோலிவுட்டுக்கு வந்தார் அசின். அப்போது இவர் கோலிவுட்டில் இவ்வளவு தூரம் காலூன்றுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

தனது நடிப்பாலும், நடனத்தாலும், கிளாமராலும் படம் பார்ப்பவர்களை மடக்கிப் போட்டார். கூடவே பார்ட்டிகள், கவனிப்புகளால் கோலிவுட் முக்கிய தலைகளையும் முடக்கிப் போட்டார். இதனால் மிக வேகமாக முன்னேறி ஒரு நிலையான இடத்தைப் பிடித்து விட்டார். அப்படியே ஆந்திராவில் மனவாடுகள் மனதிலும் கொஞ்ச காலம் கும்மியடித்தார்.

மிகக் குறுகிய காலத்தில் தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டுவிட்டார். ரஜினி மட்டும் தான் மிச்சம். அதுவும் கூட அடுத்து சத்யா மூவிஸ் தயாரிக்கவுள்ள ரஜினி படம் மூலம் நிறைவேறிவிடும் போலிருக்கிறது.

இவ்வளவு பிஸியாக காலத்தை தள்ளிக் கொண்டிருக்கும் அசினை பாலிவுட் விடாது போலிருக்கிறது. இந்திவாலாக்கள் தெடார்ந்து இவருக்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.அத்தோடு இந்தியில் காலூன்றிவிட்ட மலையாள இயக்குனர்களும் இந்த சேச்சிக்கு வலை விரித்துக் கொண்ட இருக்கின்றனர்.

அங்கு அசினுக்கு பேசப்படும் சம்பளம் தமிழை விட ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது. ஆனாலும் இந்தியை தவிர்த்தே வந்தார்.

ஆனால், ஒரு வழியாக கஜினியின் இந்தி ரீ-மேக்குக்கு அசினை வலைத்துவிட்டார்கள். அத்தோடு மேலும் 4 தயாரிப்பாளர்களும் அசினை புக் செய்ய முன் வந்துள்ளனர்.

அதில் ஒன்று ரங்க் தே பாசந்தியை இயக்கிய ராகேஷ் மெஹ்ராவின் படம். இதில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டு அட்வான்ஸையும் வாங்கிவிட்ட அசின் மற்ற படங்களுக்கும் ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

அசினின் பி.ஆர்.ஓ. இப்போதெல்லாம் மும்பையில் தான் பெரும்பாலும் டேரா போட்டிருக்கிறார். ஜுஹூ பகுதியில் அசினுக்கு ஒரு பங்களாவையும் வாடகைக்கு பிடித்துப் போட்டுவிட்டாராம் அவர்.

இதனால் மிக விரைவிலேயே பாலிவுட்டில் அசின் செட்டில் ஆகிவிடலாம் என்கிறார்கள். கூடவே அந்த பங்களாவையே அசின் விரைவில் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

அசினை மொபைலில் பிடித்து, என்னங்க அப்ப தமிழ் அவ்வளவு தானா என்று கேட்டோம்.

அப்படியெல்லாம் இல்லீங்க. இப்போது கமல் சாரின் தசாவதாரம் படத்தில் பிஸியாக இருக்கிறன். அதில் முதல் முறையாக டபுள் ஆக்ட் செய்கிறேன். அதைத் தவிர புதுப் படம் எதையும் தமிழில் ஒத்துக் கொள்ளவில்லை.

இந்தியில் அமீர்கானுடன் கஜினி ரீ-மேக்கில் நடிக்கப் போகிறேன். முருகதாஸ் தான் இதை இயக்குகிறார். தமிழில் செய்த அதே ரோல் தான் இதிலும். இதைத் தவிர இந்தியில் மேலும் 5,6 ஆபர்கள் வந்திருக்கின்றன. எல்லாவற்றையும் ஏற்கப் போவதில்ைல. இந்தி கஜினியை முடித்துவிட்டு ராகேஷ் மெஹ்ரா படத்தில் நடிக்கப் போகிறேன். அதே நேரத்தில் தமிழை விட்டுவிட மாட்டேன் என்றார்.

உங்களை சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிடாமல் ஜோதிகா தடுத்துவிட்டாராமே என்று ஒரு கேள்வியைப் போட்ேடாம், கொஞ்சம் அமைதி காத்தவர் படாரென சொன்னார்..அதுனால எனக்கு ஏதும் லாஸ் இல்லப்பா....

அதுவும் உண்மை தான்!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X