»   »  ஆசின் தான் பெஸ்ட்: சீயான் சர்டிபிகேட்! மற்ற நடிகைகளை விட ஆசின்தான் பெஸ்ட், நல்ல உழைப்பாளி என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் சீயான் விக்ரம்.மற்ற நாயகிகள் எல்லாம் அட்டகாச ஆர்ப்பரிப்புடன் வாய்ப்புகளைப் பிடித்து கல்லாவை நிரப்பி வரும் வேளையில், சத்தமே போடாமல்விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார் ஆசின்.தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் இப்போதைக்கு ஆசின்தான். வரும் தீபாவளிக்கு அசின், விக்ரமுடன்இணைந்து நடித்துள்ள மஜா படம் வெளியாகிறது. அதேபோல விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள சிவகாசி படமும் தீபாவளிக்கு களம்காணுகிறது.இந் நிலையில் விக்ரம், ஆசின், மஜா இயக்குனர் ஷபி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது,ஆசினைப் பற்றி விக்ரம், ஷபியும் சும்மா புகழ்ந்து தள்ளினார்கள். குறிப்பாக விக்ரம் ஓவராக புகழ்ந்து தள்ள, ஆசின் வெட்கத்தில் வளைந்து,நெளிந்தார்.நான் பல நடிகைகளுடன் நடித்து விட்டேன். ஆனால் ஆசின்தான் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டார். காரணம் அவரது உழைப்பு.கொடுக்கப்பட்ட கேரக்டராகவே மாறி விடுகிறார். அதை சரியாக செய்வதற்காக கடுமையாக உழைக்கிறார்.அதேபோல, நடனத்திலும் கலக்குகிறார். எத்தகைய மூவ்மெண்ட் கொடுத்தாலும் அடி பின்னி விடுகிறார். அவருக்கு ஈடு கொடுத்துஆடுவதற்கு நானே சில சமயங்களில் சிரமப்பட்டேன்.ஆசின் நடித்து இதுவரை வெளியான 3 படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகியுள்ளன. அதேபோல மஜா படமும் சிறப்பான வெற்றி பெறும்என்றார் விக்ரம்.இயக்குனர் ஷபியும், ஆசினைப் புகழ்ந்து தள்ளினார் (இருவருமே மலையாளிகள் எனபது தனிக் கதை) தொம்மனும் மக்களும் (மஜாவின்மலையாள ஒரிஜினல்) படத்தில் மம்மூட்டி நடித்திருந்ததை விட பல காட்சிகளில் விக்ரம் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டு பேருமேஅவரவர் ஸ்டைலில் இந்தப் படத்தை செய்துள்ளனர் என்றார்.புகழாரத்தால் நனைந்து போயிருந்த ஆசின் கூறுகையில், நான் நல்ல உழைப்பாளி என்று விக்ரம் சாரே கூறி விட்டார். அதுதான் எனதுவெற்றிக்கும் காரணம். எல்லா ஹீரோக்களும் என் மீது அன்பாக இருக்கிறார்கள். எனது கடுமையாக உழைப்புதான் அதற்குக் காரணம்.நான் நடித்த இரண்டு படங்கள், இரண்டிலும் முன்னணி ஹீரோக்கள், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றன. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.விக்ரமையும் விஜய்யையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (ஐய்!)என்றார் ஆசின் தன் பங்குக்கு.சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போடும் கஜினி படத்திலும் ஆசினின் நடிப்பு மிக நன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தனதுஉறவினர் தயாரிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் தனக்கு மிக வேண்டிய ஜோதிகாவோடு ஆசினையும் ஜோடியாக்கச் சொல்லிவிட்டார்சூர்யா.ஆசின் காட்டில் இப்போது வட கிழக்குப் பருவ மழை!

ஆசின் தான் பெஸ்ட்: சீயான் சர்டிபிகேட்! மற்ற நடிகைகளை விட ஆசின்தான் பெஸ்ட், நல்ல உழைப்பாளி என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் சீயான் விக்ரம்.மற்ற நாயகிகள் எல்லாம் அட்டகாச ஆர்ப்பரிப்புடன் வாய்ப்புகளைப் பிடித்து கல்லாவை நிரப்பி வரும் வேளையில், சத்தமே போடாமல்விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார் ஆசின்.தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் இப்போதைக்கு ஆசின்தான். வரும் தீபாவளிக்கு அசின், விக்ரமுடன்இணைந்து நடித்துள்ள மஜா படம் வெளியாகிறது. அதேபோல விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள சிவகாசி படமும் தீபாவளிக்கு களம்காணுகிறது.இந் நிலையில் விக்ரம், ஆசின், மஜா இயக்குனர் ஷபி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது,ஆசினைப் பற்றி விக்ரம், ஷபியும் சும்மா புகழ்ந்து தள்ளினார்கள். குறிப்பாக விக்ரம் ஓவராக புகழ்ந்து தள்ள, ஆசின் வெட்கத்தில் வளைந்து,நெளிந்தார்.நான் பல நடிகைகளுடன் நடித்து விட்டேன். ஆனால் ஆசின்தான் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டார். காரணம் அவரது உழைப்பு.கொடுக்கப்பட்ட கேரக்டராகவே மாறி விடுகிறார். அதை சரியாக செய்வதற்காக கடுமையாக உழைக்கிறார்.அதேபோல, நடனத்திலும் கலக்குகிறார். எத்தகைய மூவ்மெண்ட் கொடுத்தாலும் அடி பின்னி விடுகிறார். அவருக்கு ஈடு கொடுத்துஆடுவதற்கு நானே சில சமயங்களில் சிரமப்பட்டேன்.ஆசின் நடித்து இதுவரை வெளியான 3 படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகியுள்ளன. அதேபோல மஜா படமும் சிறப்பான வெற்றி பெறும்என்றார் விக்ரம்.இயக்குனர் ஷபியும், ஆசினைப் புகழ்ந்து தள்ளினார் (இருவருமே மலையாளிகள் எனபது தனிக் கதை) தொம்மனும் மக்களும் (மஜாவின்மலையாள ஒரிஜினல்) படத்தில் மம்மூட்டி நடித்திருந்ததை விட பல காட்சிகளில் விக்ரம் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டு பேருமேஅவரவர் ஸ்டைலில் இந்தப் படத்தை செய்துள்ளனர் என்றார்.புகழாரத்தால் நனைந்து போயிருந்த ஆசின் கூறுகையில், நான் நல்ல உழைப்பாளி என்று விக்ரம் சாரே கூறி விட்டார். அதுதான் எனதுவெற்றிக்கும் காரணம். எல்லா ஹீரோக்களும் என் மீது அன்பாக இருக்கிறார்கள். எனது கடுமையாக உழைப்புதான் அதற்குக் காரணம்.நான் நடித்த இரண்டு படங்கள், இரண்டிலும் முன்னணி ஹீரோக்கள், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றன. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.விக்ரமையும் விஜய்யையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (ஐய்!)என்றார் ஆசின் தன் பங்குக்கு.சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போடும் கஜினி படத்திலும் ஆசினின் நடிப்பு மிக நன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தனதுஉறவினர் தயாரிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் தனக்கு மிக வேண்டிய ஜோதிகாவோடு ஆசினையும் ஜோடியாக்கச் சொல்லிவிட்டார்சூர்யா.ஆசின் காட்டில் இப்போது வட கிழக்குப் பருவ மழை!

Subscribe to Oneindia Tamil

மற்ற நடிகைகளை விட ஆசின்தான் பெஸ்ட், நல்ல உழைப்பாளி என்று சர்டிபிகேட் கொடுத்துள்ளார் சீயான் விக்ரம்.

மற்ற நாயகிகள் எல்லாம் அட்டகாச ஆர்ப்பரிப்புடன் வாய்ப்புகளைப் பிடித்து கல்லாவை நிரப்பி வரும் வேளையில், சத்தமே போடாமல்விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார் ஆசின்.

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருப்பவர் இப்போதைக்கு ஆசின்தான். வரும் தீபாவளிக்கு அசின், விக்ரமுடன்இணைந்து நடித்துள்ள மஜா படம் வெளியாகிறது. அதேபோல விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள சிவகாசி படமும் தீபாவளிக்கு களம்காணுகிறது.


இந் நிலையில் விக்ரம், ஆசின், மஜா இயக்குனர் ஷபி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது,

ஆசினைப் பற்றி விக்ரம், ஷபியும் சும்மா புகழ்ந்து தள்ளினார்கள். குறிப்பாக விக்ரம் ஓவராக புகழ்ந்து தள்ள, ஆசின் வெட்கத்தில் வளைந்து,நெளிந்தார்.

நான் பல நடிகைகளுடன் நடித்து விட்டேன். ஆனால் ஆசின்தான் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டார். காரணம் அவரது உழைப்பு.கொடுக்கப்பட்ட கேரக்டராகவே மாறி விடுகிறார். அதை சரியாக செய்வதற்காக கடுமையாக உழைக்கிறார்.


அதேபோல, நடனத்திலும் கலக்குகிறார். எத்தகைய மூவ்மெண்ட் கொடுத்தாலும் அடி பின்னி விடுகிறார். அவருக்கு ஈடு கொடுத்துஆடுவதற்கு நானே சில சமயங்களில் சிரமப்பட்டேன்.

ஆசின் நடித்து இதுவரை வெளியான 3 படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகியுள்ளன. அதேபோல மஜா படமும் சிறப்பான வெற்றி பெறும்என்றார் விக்ரம்.

இயக்குனர் ஷபியும், ஆசினைப் புகழ்ந்து தள்ளினார் (இருவருமே மலையாளிகள் எனபது தனிக் கதை) தொம்மனும் மக்களும் (மஜாவின்மலையாள ஒரிஜினல்) படத்தில் மம்மூட்டி நடித்திருந்ததை விட பல காட்சிகளில் விக்ரம் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டு பேருமேஅவரவர் ஸ்டைலில் இந்தப் படத்தை செய்துள்ளனர் என்றார்.


புகழாரத்தால் நனைந்து போயிருந்த ஆசின் கூறுகையில், நான் நல்ல உழைப்பாளி என்று விக்ரம் சாரே கூறி விட்டார். அதுதான் எனதுவெற்றிக்கும் காரணம். எல்லா ஹீரோக்களும் என் மீது அன்பாக இருக்கிறார்கள். எனது கடுமையாக உழைப்புதான் அதற்குக் காரணம்.

நான் நடித்த இரண்டு படங்கள், இரண்டிலும் முன்னணி ஹீரோக்கள், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றன. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.விக்ரமையும் விஜய்யையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (ஐய்!)என்றார் ஆசின் தன் பங்குக்கு.

சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போடும் கஜினி படத்திலும் ஆசினின் நடிப்பு மிக நன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தனதுஉறவினர் தயாரிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் தனக்கு மிக வேண்டிய ஜோதிகாவோடு ஆசினையும் ஜோடியாக்கச் சொல்லிவிட்டார்சூர்யா.

ஆசின் காட்டில் இப்போது வட கிழக்குப் பருவ மழை!

Read more about: vikram praises asin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil