ஆசினை அழைக்கும் இந்தி ஆசினுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சிவகாசி, விக்ரமின் மஜா, கொஞ்சம் முன்பு வெளியாகி இன்னும் வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் கஜினி ஆகிய படங்களில் நடித்து இப்போதையே கோடம்பாக்கத்தின் கனவுக் கன்னியாக விளங்கும் ஆசின் ஒரேஒரு தமிழ்ப் படத்தில் தான் புக் ஆகி இருக்கிறார்.அது எஸ்.ஜே. சூர்யா இயக்கும் புலி. இதில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேருகிறார்.கொச்சினைச் சேர்ந்த இந்த மலையாளத்து சேச்சி தமிழ், தெலுங்கு என 10 படங்களை முடித்துவிட்டார். இப்போதும் தமிழிலும்தெலுங்கிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்கள் தேடி வந்தாலும் வேறு எந்தப் படமும் புக் ஆகவில்லை.புலி படத்துக்குப் பின் சம்பளத்தை கூட்டுவதற்காக ஆசின் இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார்கள். இப்போது ஆசின் கேட்கும்சம்பளம் ரூ. 40 லட்சம். இந்த சம்பளத்தைத் தர தயாரிப்பாளர்கள் தயார் தான் என்றாலும் ஆசினின் அப்பா போடும்கண்டிஷன்களால் தான் அவரைத் தேடிப் போகும் தயாரிப்பாளர்கள் வெறுப்போடு திரும்பிவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.இந் நிலையில் கஜினி படத்தைப் பார்த்த அமீர் கான் அதில் மிகவும் லயித்துப் போய்விட்டாராம். அந்தப் படத்தை இந்தியில்செய்ய ஆர்வமாக இருக்கிறாராம். அது தொடர்பாக இயக்குனர் முருகதாசிடமும் சூர்யாவிடமும் பேசியவர் அப்படியே ஆசினிடம்பேசியிருக்கிறார்.மிக நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டிய அமீர், இந்தியிலும் நீங்களே அந்த கேரக்டரை செய்யுங்களேன் என்றாராம்.இதையடுத்து வானில் பறந்து கொண்டிருக்கிறார் ஆசின்.இது தொடர்பாக பேச்சுவார்த்தை ஏதும் இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தி முன்னணி ஹீரோவிடம் வந்த அழைப்புகுறித்து சீரியசாகவே யோசித்து வருகிறார் ஆசின்.இதற்கிடையே அமீர் கானுடன் பேச முருகதாசும், சூர்யாவும் மும்பைக்கு பிளைட் பிடித்திருக்கிறார்கள். இந் நிலையில் சிரஞ்சீவைவைத்து முருகதாஸ் இயக்கும் ஸ்டாலின் படத்தின் செகண்ட் ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம் ஆசின். இதில் ஹீரோயின்த்ரிஷா.முருகதாசுக்கு இன்னொரு மகிழ்ச்சியான விஷயம். கஜினி படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவரைக் கூப்பிட்டு ஏகத்துக்கும்பாராட்டிவிட்டு, இது மாதிரி ஒரு வேகமான கதை இருந்தா ரெடி பண்ணிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.ஷங்கருடன் சிவாஜியை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தை ரஜினி செய்யலாம் என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்.

By Staff

ஆசினுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்துவிட்டது.

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சிவகாசி, விக்ரமின் மஜா, கொஞ்சம் முன்பு வெளியாகி இன்னும் வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் கஜினி ஆகிய படங்களில் நடித்து இப்போதையே கோடம்பாக்கத்தின் கனவுக் கன்னியாக விளங்கும் ஆசின் ஒரேஒரு தமிழ்ப் படத்தில் தான் புக் ஆகி இருக்கிறார்.

அது எஸ்.ஜே. சூர்யா இயக்கும் புலி. இதில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேருகிறார்.

கொச்சினைச் சேர்ந்த இந்த மலையாளத்து சேச்சி தமிழ், தெலுங்கு என 10 படங்களை முடித்துவிட்டார். இப்போதும் தமிழிலும்தெலுங்கிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்கள் தேடி வந்தாலும் வேறு எந்தப் படமும் புக் ஆகவில்லை.


புலி படத்துக்குப் பின் சம்பளத்தை கூட்டுவதற்காக ஆசின் இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார்கள். இப்போது ஆசின் கேட்கும்சம்பளம் ரூ. 40 லட்சம். இந்த சம்பளத்தைத் தர தயாரிப்பாளர்கள் தயார் தான் என்றாலும் ஆசினின் அப்பா போடும்கண்டிஷன்களால் தான் அவரைத் தேடிப் போகும் தயாரிப்பாளர்கள் வெறுப்போடு திரும்பிவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இந் நிலையில் கஜினி படத்தைப் பார்த்த அமீர் கான் அதில் மிகவும் லயித்துப் போய்விட்டாராம். அந்தப் படத்தை இந்தியில்செய்ய ஆர்வமாக இருக்கிறாராம். அது தொடர்பாக இயக்குனர் முருகதாசிடமும் சூர்யாவிடமும் பேசியவர் அப்படியே ஆசினிடம்பேசியிருக்கிறார்.

மிக நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டிய அமீர், இந்தியிலும் நீங்களே அந்த கேரக்டரை செய்யுங்களேன் என்றாராம்.இதையடுத்து வானில் பறந்து கொண்டிருக்கிறார் ஆசின்.


இது தொடர்பாக பேச்சுவார்த்தை ஏதும் இன்னும் முடிவாகவில்லை என்றாலும் இந்தி முன்னணி ஹீரோவிடம் வந்த அழைப்புகுறித்து சீரியசாகவே யோசித்து வருகிறார் ஆசின்.

இதற்கிடையே அமீர் கானுடன் பேச முருகதாசும், சூர்யாவும் மும்பைக்கு பிளைட் பிடித்திருக்கிறார்கள். இந் நிலையில் சிரஞ்சீவைவைத்து முருகதாஸ் இயக்கும் ஸ்டாலின் படத்தின் செகண்ட் ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம் ஆசின். இதில் ஹீரோயின்த்ரிஷா.

முருகதாசுக்கு இன்னொரு மகிழ்ச்சியான விஷயம். கஜினி படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவரைக் கூப்பிட்டு ஏகத்துக்கும்பாராட்டிவிட்டு, இது மாதிரி ஒரு வேகமான கதை இருந்தா ரெடி பண்ணிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.

ஷங்கருடன் சிவாஜியை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தை ரஜினி செய்யலாம் என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X