திருமணத்திற்கு முன் உதவி இயக்குநரான ராமராஜன் செய்த காதல் லீலைகள்... நடிகை நளினியின் மலரும் நினைவுகள்
சென்னை: நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி காதல் திருமணம் செய்து பின் 13 ஆண்டுகள் கழித்து விவாகரத்தும் செய்து விட்டனர்.
இவர்களுக்கு அருண் மற்றும் அருணா என இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். இருவருக்குமே திருமணமும் முடித்து பெற்றோராக தங்களது கடமை செய்து விட்டார்கள்.
சமீபத்தில் நடிகை நளினி கொடுத்திருந்த பேட்டியில் திருமணத்திற்கு முன்பு நடந்த காதல் சம்பவம் முதல் அடிதடி சம்பவம் முறை பகிர்ந்துள்ளார்.

நளினியின் பயணம்
நளினியின் தந்தை ஒரு நடன இயக்குனர். அவரது தாயாரும் ஒரு நடனக் கலைஞர். சிறு வயதிலேயே நளினியை நடிகையாக்கி விட்டனர். ஆனால் நளினிக்கோ திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்ததாம். இதனால் ஓடாத கதைகளாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் ஒவ்வொரு படமும் வெற்றி பெற்று தாயாரின் வற்புறுத்தலின் பேரில் 120 படங்கள் நடித்து விட்டதாக நளினி கூறியுள்ளார்.

வசனத்துடன் கடிதம்
இயக்குனர் ராமநாராயணனிடம் துணை இயக்குனராக பணியாற்றினார் ராமராஜன். எனவே கதாநாயகன் ஆவதற்கு முன்பிருந்தே நளினியின் படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்போது வசனம் சொல்லிக் கொடுக்க செல்கையில் காதல் கடிதங்களையும் சேர்த்து கொடுப்பார் என்றும் ஒரு முறை நடிக்க வரும் அவசரத்தில் நெற்றியில் பொட்டு வைக்க மறந்ததாகவும், கண்ட்டின்யுட்டி மிஸ்டேக் என்று டைரக்டர் சுட்டிக் காட்டியதால் உடனே ராமராஜன் நெற்றியில் போட்டு வைத்துவிட்டு உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்ததாகவும், சூட்டிங் ஸ்பாட்டில் தங்களுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி அவர் மகிழ்வார் என்றும் நளினி நினைவு கூர்ந்துள்ளார்.

அடிதடி
நளினியை பெண் கேட்டு ராமராஜன் நளினியின் வீட்டை அணுகிய போது அவர்கள் சம்மதிக்கவில்லையாம். இதனால் நடிகராகி விடலாம் என்று ஒரு படத்தில் ஒப்பந்தமானாராம். அந்தத் தகவலை சொல்வதற்காக நளினி நடித்துக் கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் ராமராஜன். அப்போது நளினியின் குடும்பத்தினர் அவரை தாக்கியுள்ளனர். உடனே உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் வந்தது போல அவர் மீது பாய்ந்து காப்பாற்றினாராம். அதனைத் தொடர்ந்து எந்தத் தமிழ் படங்களிலும் நடிக்க வைக்காமல் முழுக்க முழுக்க மலையாள திரைப்படங்களில் நடிக்க வைத்து ஒரு ஆண்டு கேரளாவிலேயே நளினியை தங்க வைத்துள்ளார் அவரது தாயார்.

தலைமறவாகி திருமணம்
பின் மீண்டும் நளினி ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வந்த போது அதில் நடிகர் பாண்டியன் நடித்துக் கொண்டிருந்தாராம். அவரும் ராமராஜனும் மதுரை என்பதால் அவர் மூலம் தங்களது திருமண ஏற்பாட்டை ரகசியமாக திருப்பதியில் நடத்தி முடித்தார்களாம். சென்னையில் நீங்கள் வாழ முடியாது என்று நளினி குடும்பத்தார் மிரட்டியபோது அவர்கள் தஞ்சமடைந்தது எம்.ஜி.ஆரிடம். அவர்தான் இவர்களுக்கு ரிசப்ஷன் நடத்தி பாதுகாப்பும் கொடுத்தார் என நளினி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











