நாம் பிரிந்துவிடுவோம் என்று திருமணம் ஆனபோதே சரியாக ஜோசியம் சொன்னார் ராமராஜன்... நளினி உருக்கம்

சென்னை: நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்தபோது சினிமாவில் நடன கலைஞர்களாக இருந்த நளினியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடும்ப எதிர்ப்பை மீறி திருப்பதியில் ரகசிய திருமணம் செய்தவர்கள் சென்னையில் எம்.ஜி.ஆரிடம் பாதுகாப்பு கொடுக்கும்படி தஞ்சமடைந்தார்கள்

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திருமண வரவேற்பை நடத்தி வைத்து பாதுகாப்பும் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அவர்கள் பிரிந்து விட்டனர்.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

நளினி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சில படங்களில் ராமராஜன் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அப்போதே வசனம் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் தன்னுடைய காதலை பட்டும் படாமல் வெளிக்காட்டியுள்ளார். பொதுவாக நடிகர்கள் உதவி இயக்குநர்களிடம் கலகலப்பாக கிண்டலடித்து பேசுவார்கள். நளினியும் அந்த சமயத்தில் தன்னுடன் நடித்த வேறொரு நடிகையுடன் சேர்ந்து கொண்டு ராமராஜனை கலாய்த்துள்ளாராம்.

திருமணம்

திருமணம்

ஒரு கட்டத்தில் பெண் கேட்டு ராமராஜன் நளினி வீட்டிற்கு செல்லவே அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் காலப்போக்கில் அடிதடியில் முடிந்ததாம். பின்னர் ஒரு வருடம் நளினியை கேரளாவிற்கு அழைத்துச் சென்று மலையாள படங்களில் மட்டுமே நடிக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் நளினி ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தமானபோதுதான் ராமராஜன் நளினியை ரகசியமாக திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் முடித்திருக்கிறார்.

விவாகரத்து

விவாகரத்து

இப்படி பல சவால்களை சந்தித்து எம்.ஜி.ஆர் திருமண வரவேற்பை நடத்தி பாதுகாப்பு கொடுத்து சேர்த்து வைத்த தம்பதி 13 ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டனர். அவர்களுக்கு அருணா என்ற பெண்ணும் அருண் என்ற ஆணும் இரட்டை குழந்தைகளாக பிறந்தார்கள். ராமராஜன் நன்றாக ஜோசியம் பார்ப்பார் என்று நளினி சமீபத்தில் கூறியுள்ளார்.

ராமராஜன் ஜோசியம்

ராமராஜன் ஜோசியம்

திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே சில விஷயங்கள் நடக்கும் என்று ஜோசியம் பார்த்து கூறிவிட்டாராம். அதாவது நமக்கு பிறக்கப் போகும் குழந்தைகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று இருந்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் பிரிந்து விடுவோம். மகன் வளர வளர என்னுடைய புகழ் குறைந்து கொண்டே போகும் என்று கூறினாராம். இதெல்லாம் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் கேட்டால் இல்லை நடக்கும் என்றாராம். அதே போல ஒரு கட்டத்தில் குழந்தைகளுடன் இருப்பதா இல்லை அவருடன் இருப்பதா என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நான் குழந்தைகளுடன் இருந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். அருகில் இருந்து எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வதை விட இப்போது தூரத்தில் இருப்பதால் முன்பு போலவே காதலர்களாகவே காதலித்துக் கொண்டிருக்கிறோம் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X