»   »  அஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.

அஸ்வினி-கார்த்திகா-ஆலிம்கான் நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.இவரது சொந்த ஊர் கர்நாடகம்.இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.

Subscribe to Oneindia Tamil

நடிகர்கள் அவ்வப்போது அரசியல் அவதாரம் எடுப்பது போல, அரசியல்வாதிகளும்அவ்வப்போது நடிக்க வந்து ரசிகர்களை பீதியடைய வைப்பார்கள்.

முன்பு திருநாவுக்கரசு நடிக்க வந்தார். பின்னர் காங்கிரஸ் எம்.பியான அன்பரசுவும் ஒருபடத்தில் நடித்தார். சமீபத்தில் திருமாவளவன், புரட்சி வீரன் வேடத்தில் அன்புத் தோழிஎன்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கூடஒரு படத்தில் தலைகாட்டியுள்ளார்.

இந் நிலையில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான தா.பாண்டியனும் நடிக்கிறார்.

கடந்த 1990ல் வெளியான படம் புலன் விசாரணை. ஆர்.கே. செல்வமணிதயாரிப்பில், இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பில், விஜயகாந்த், சரத்குமார் நடிப்பில்உருவான படம்தான் புலன் விசாரணை.

இப்போது இப்படத்தை மீண்டும் எடுக்கிறார் ராவுத்தர். செல்வமணிதான்இப்படத்தையும் இயக்குகிறார். புலன் விசாரணை-2 என்று இப்படத்திற்குப் பெயர்வைத்துள்ளனர்.

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் புலன் விசாரணை-2 படத்தில் தா.பாண்டியன் முக்கியபாத்திரத்தில் நடிக்கிறார். அரசியல்வாதி வேடத்தில்தான் பாண்டியன் நடிக்கிறார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது.

பிரஷாந்த்துக்கு ஜோடியாக கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். (தூத்துக்குடியில்நடிக்கும் கார்த்திகா அல்ல. இவர் வேறு, ஆனால் அந்த கார்த்திகா போல இவருக்கும்சொந்த ஊர் கேரளா தான்).

இப்படம் குறித்து செல்வமணி கூறுகையில், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகுஇப்படத்தை எடுக்கிறோம். பிரஷாந்த் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

அவருக்கு 3 ஜோடிகள். கார்த்திகா தவிர ஆலிம்கான், அஸ்வினி ஆகியோரும்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்றார்.

இதில் அஸ்வினி ஏற்கனவே ஒரு உப்புமா கம்பெனி தயாரித்த ஒரு டப்பா படத்தில்தலைகாட்டியவர் தான். அதில் கிளாமரில் கலக்கியெடுத்தார் அஸ்வினி. ஆனால், படம் வெளிவரவே இல்லை.இந் நிலையில் அவருக்கு அடுத்த படம் கிடைத்துள்ளது.

இவரது சொந்த ஊர் கர்நாடகம்.

இன்னொரு ஹீரோயினான ஆலிம் கான் ஆந்திராவைச் சேர்ந்தவர்.

செல்வமணி கூறுகையில், இந்தப் படத்திலும் கேப்டனையே நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர்அரசியலில் பிசியாகிவிட்டார். இதனால் தான் பிரசாந்தை தேர்வு செய்தேன். அவருடன் ரோஜா படத்தில்ஏற்கனவே பணியாற்றியுள்ளேன்.

திறமையான நடிகர் அவர், இதில் வித்தியாசமான பிரசாந்தை வெளிக் கொண்டு வருவேன். 5 வருடங்களுக்கேமுன்பே புலன் விசாரணைை பார்ட் டூ எடுக்க திட்டமிட்டேன். இப்போது தான் காலம் கணிந்துள்ளது என்றார்.

காதல் பட புகழ் இசையமைப்பாளர் ஜோஷ்யா தான் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட செல்வமணி இப்போது சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டுள்ளார்.

அடுத்து குலு மணாலி, ஆக்ராவிலும் சூட்டிங் நடக்கவுள்ளதாம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil