twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஸ்னி கதாபாத்திரங்களுக்கு புது நிறம்.. அட்லாண்டா பெண் சிமோன் செவனின் புதிய முயற்சி!

    |

    சென்னை : டிஸ்னி ராணிகள் என்று சொல்லப்படும் சின்ரல்லா போன்ற கதாபாத்திரங்களுக்கு அட்லாண்டாவை சேர்ந்த பெண் புதிய நிறம் தந்து அசத்தியிருக்கிறார்.

    அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியா என்கிற மாகாணத்தில் அட்லாண்டா என்கிற ஊரில் வசித்து வரும் பெண் தான் சிமோன் செவன். கறுப்பு நிற பெண்ணான இவர் சிறு வயதில் இருந்தே தன் வீட்டில் பல விஷயங்களை கறுப்பு நிறத்தோடு பார்த்து வளர்ந்து இருக்கிறார். உதாரணத்திற்கு, சினிமாக்களில் காட்டபடும் தேவதைகள் இவரது வீட்டில் கறுப்பு நிறத்தோடு இருப்பார்கள். இவரது அம்மா முற்றிலும் சிமோனுக்கு வேறு உலகத்தை காட்டியே வளர்த்து இருக்கிறாள்.

    என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் !என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் !

    Atlanta girl simone has given disney characters a new color

    வெளியுலகத்தை பொருத்த வரையில் கறுப்பு என்றால் அழுக்கு கறுப்பு என்றால் வெள்ளையோடு கீழானது என்ற தத்துவம் பல நூறு ஆண்டுகளாக மக்களின் மனதில் உள்ளது. அமெரிக்க சினிமாக்களும் அதையே பிரதிப்பலித்தது. கறுப்பு என்பது அறுவறுப்பு இல்லை அது ஒரு சாதரான நிறம் ராணிகளும் சாதனையாளர்களும் கறுப்பாக இருக்க கட்டாயம் வாய்ப்பு இருக்கிறது என்கிற புரிதலோடு வளர்ந்திருக்கிறார் சிமோன் செவன்.

    Atlanta girl simone has given disney characters a new color

    இந்த புரிதல் தான் சிமோனை புதிய உயரத்தை அடைய உதவியிருக்கிறது. தற்போது போட்டோகிராபி மற்றும் போட்டோ எடிட்டிங்கை கற்று தேர்ந்துள்ள சிமோன் செவன். முதலில் டிஸ்னியின் பிரபல வெற்றி படமான சின்ரல்லா போஸ்டரை உருமாற்றி அந்த போஸ்டரில் தான் இருப்பது போல் உருவாக்கினார்.

    Atlanta girl simone has given disney characters a new color

    அதுவரை சின்ரல்லா ராணியை வெள்ளை உருவிலே பார்த்த மக்களுக்கு இது புதுமையாக இருந்தது. இதில் இருந்த ஆச்சரியம் என்ன வென்றால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இந்த புகைப்படம் மிகவும் பிடித்து போக இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது சிமோனுக்கு பெரிய அளவில் உற்சாகத்தை அளித்தது.

    இந்த புகைப்படம் உருவாக்க தனக்கு ஐடியா கொடுத்து 1997ல் வெளிவந்த சின்ரல்லா படம் தான் என்று கூறியிருந்தார். இந்த படத்தில் முதல் முறையாக கறுப்பின பெண்ணை ராணியாக வைத்து படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

    இதன் பின் வரிசையாக டிஸ்னியின் மிக முக்கிய கதாபாத்திரங்களை உருமாற்றியுள்ளார் சிமோன். இதில் ஏரியல், ரேபுன்ஸல், மேலிபிஸன்ட், டியான மற்றும் ஜாஸ்மின் ஆகிய படங்களின் போஸ்டரையும் தனது உருவத்தில் உருமாற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் உலகம் முழுக்க இருக்கும் பெரிய பத்திரிக்கை நிறுவனங்களால் பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் சிமோன் தன் இரண்டாவது அம்மாவை கொரோனாவால் இழந்தார். இந்த சோகத்தில் இருந்து மீலவே தற்போது புதிதாக பல போஸ்டர்களை உருவாக்கியிருக்கிறார்.

    Atlanta girl simone has given disney characters a new color

    சிமோனின் இந்த முயற்சி கறுப்பு என்பது மற்ற நிறம் போல அதுவும் ஒரு நிறம் தான் அது தாழ்வான நிறம் இல்லை என்பதை உணர வைத்துள்ளது. மிக முக்கியமாக வளரும் குட்டி குழந்தைகளை இந்த புகைப்படங்கள் வெகுவாக சென்றடைந்துள்ளது.

    English summary
    Atlanta girl simone has given disney characters a new color
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X