தீபாவளி- விஜய்யும் வருகிறார்!
| Click here for more images |
இளைய தளபதி விஜய், இளமைத் தளபதி நமீதா, ஜிலீர் தேவதை ஷ்ரியாவின் நடிப்பில் மெருகேறியிருக்கும் அழகிய தமிழ் மகன் தீபாவளிக்கு கண்டிப்பாக ரிலீஸ் ஆகிறதாம்.
விஜய் படு அழகாக இருக்கிறார். அழகிய தமிழ் மகன் விஜய்யின் வெற்றி மகுடத்தில் இன்னும் ஒரு புகழ் இறகை சேர்க்கப் போவது உறுதி என்பது விஜய்யைப் பார்த்தாலே தெரிகிறது. படு சந்தோஷமாக இருக்கிறார் படம் சிறப்பாக வந்துள்ளதாம்.
இப்படத்தில் விஜய்க்கு இரு பெரும் நாயகிகள் ஜோடிகளாகியுள்ளனர். ஒருபக்கம் நமீதா, இன்னொரு பக்கம் ஷ்ரியா. ஒரே நேரத்தில் இரு டாப் ஸ்டார்களுடன் விஜய் ஜோடி போட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு.
படத்திற்கு இன்னொரு பலம் ஏ.ஆர்.ரஹ்மான். விஜய் ரசிகர்களின் டேஸ்ட் அறிந்து அசத்தலாக பாட்டுக்களைக் கொடுத்துள்ளார். பாட்டுக்கள் ஏற்கனவே பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டன. தற்போது ரிக்கார்டிங்கில் ரஹ்மான் பிசியாக உள்ளார்.
படம் முதலில் தீபாவளிக்கு வருமா என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் தற்போது கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீஸாகிறதாம். தீபாவளிக் களத்தில் பில்லா, பீமா போன்ற படங்களும் குதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் 7ம் தேதியே (அதாவது தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே) படம் திரைக்கு வருகிறதாம். தனது ஆஸ்தான கேரள ஜோதிடரைக் கேட்டுத்தான் பட ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அப்பச்சன் முடிவு செய்தாராம்.
உலகம் முழுவதும் 410 பிரிண்ட்டுகளுடன் அழகிய தமிழ் மகன் ரிலீஸாகிறது. தமிழகத்தில் மட்டும் 300 பிரிண்ட்கள் போட்டுள்ளனராம். படத்தை தமிழகம் முழுவதும் பிரமீட் சாய்மீரா நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.


Click it and Unblock the Notifications











