twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெல்லை டூ அமெரிக்கா: எம்.ஜி.ஆர் பாட்டு, எக்கச்சக்க வசனம்... ஹாலிவுட்டில் ஒரு சந்தானம்!

    By
    |

    சென்னை: உறைந்து கிடக்கிற மனதை தூளாக்கவும் கூலாக்கவும் செய்யும் வித்தை காமெடிக்கு மட்டுமே இருக்கிறது. அதை நோய் தீர்க்கும் பெரும் மருந்து என்கிறார்கள்.

    அதனால்தான் வடிவேலுவின் காமெடியை, ஏற்கனவே பார்த்திருந்தும் இன்னும் பார்த்து விழுந்து சிரிக்கிறோம், குலுங்கி ரசிக்கிறோம்.

    அந்த காமெடி கலையில் அஜிஸ் அன்சாரி, அசத்தல் கிங். அவரது வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு மொத்த அமெரிக்காவும் காத்துக்கிடக்கிறது சிரித்து ரசிக்க.

    யோகி பாபுவின் கலக்கல் யோகி பாபுவின் கலக்கல் "காக்டெய்ல்"... மார்ச் 6ந் தேதி முதல்.. சியர்ஸ்!

    ஸ்டாண்ட் அப்

    ஸ்டாண்ட் அப்

    அந்த சிரிப்புச் சத்தங்களுக்கு இடையே வரும் கைதட்டல்களும் விமர்சனங்களும்தான் அஜீஸின் கலை! ஸ்டாண்ட் அப் காமெடியனாக மேடையேறிய அஜீஸ், இன்று ஹாலிவுட் நடிகர். 'தி ராக்கர்', 'ஃபன்னி பீப்பிள்', 'அப்சர்வ் அண்ட் ரிப்போர்ட்', 'ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் டிரிப்ட்', 'ஐ லவ் யூ மேன்', 'குரூயல் சம்மர்', 'எபிக்', 'திஸ் இஸ் எண்ட்', த பிராப்ளம் வித் அபு உட்பட பல படங்களில் அஜீஸின் காமெடியில் சிரித்திருக்க முடியும்.

    எம்டிவி விருது விழா

    எம்டிவி விருது விழா

    இதுதவிர ஏராளமான சீரியல்களிலும் நடித்திருக்கிறார் அஜீஸ். 2009-ம் வருடம் என்பிசி நடத்திய 'பார்க்ஸ் அண்ட் ரிகிரியேசன்' என்ற காமெடி டிவி ஷோவில் நடிகராக அறிமுகமாகிய அஜீஸ், மீடியாவால் பாராட்டப்பட்டார். அவரது நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகு 2010-ல் எம்டிவி விருது விழாவைத் தொகுத்து வழங்கினார் இவர். ‘பிரிசியஸ்' பட கேரக்டரை கிண்டல் செய்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கப் பாராட்டு.

    வாசுதேவ நல்லூர்

    வாசுதேவ நல்லூர்

    தொடர்ந்து குறும்படங்களை எடுத்து வந்த அஜீஸ், நடிப்பின் பக்கம் திரும்ப, அதிக வாய்ப்புகள் கதவைத் தட்டின. நடிப்பில்லாத நேரத்தில் டூருக்கு கிளம்பி விடுகிறார் அஜீஸ். அஜீஸின் அப்பா சவுகத், குடலியல் மருத்துவர். அம்மா பாத்திமாவும் மருத்துவத் துறையில் பணியாற்றுகிறார். இருவரும் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள். சவுகத் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.

    தமிழில் பேசி

    தமிழில் பேசி

    திருநெல்வேலியில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதும் சேர்ந்த முதல் பேட்ச் மாணவர் சவுகத். அம்மா பாத்திமா, கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கொலம்பியாவில் பிறந்தவர் அஜீஸ் அன்சாரி. சொந்தங்களை தேடி சில வருடங்களுக்கு முன் இந்தியா வந்த அஜீஸ், பாட்டி தில்சாத்திடம் தமிழில் பேசி அசத்தி இருக்கிறார்.

    மாஸ்டர் ஆப் நன்

    மாஸ்டர் ஆப் நன்

    அவரது உறவினரான டாக்டர் ஹபிபுல்லா கூறும்போது, 'திருவனந்தபுரம் வந்திருந்தார் அன்சாரி. ரசிகர்கள் கூடிவிட்டனர். சிலர் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அஜிஸ் தமிழில் பதிலளித்தார்' என்கிறார். 'மாஸ்டர் ஆப் நன்' என்ற இவரது தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது. தனது ஆரம்பகால அனுபவங்களை மையப்படுத்திய இந்த தொடரில் அஜீஸின் அப்பா சவுகத்தும் அம்மா பாத்திமாவும் நடித்திருந்தனர்.

    ஒபாமா மகள்கள்

    ஒபாமா மகள்கள்

    பிளாஷ்பேக் காட்சியில் எம்.ஜி.ஆர் பாடலான, 'செவ்வந்தி மாலைப்பொழுது...' ஒலிக்க, கூடவே ஏகப்பட்ட தமிழ் வசனங்களும்! இந்த தொடருக்காக கோல்டன் குளோப் விருதையும் பெற்றிருக்கிறார் இவர். அமெரிக்க முன்னாள் அதிபர் பரேக் ஒபாமாவின் மகள்கள், அன்சாரியின் காமெடிக்கு தீவிர ரசிகைகள். இதற்காகவே வெள்ளை மாளிகைக்கு சில முறை அவரை அழைத்து விருந்து வைத்திருக்கிறார்கள்.

    தமிழ்ப்படம் பார்ப்பேன்

    தமிழ்ப்படம் பார்ப்பேன்

    'அப்பா அம்மா தமிழ்நாட்டுல இருந்து வந்ததால நிறைய தமிழ்ப்படம் பார்ப்பேன். எனக்கும் தமிழ்ல ஆக்ஷன் படம் பண்ண ஆசை இருக்கு. கொஞ்ச காலமா தமிழ்நாட்டுக்கு வரலை. என்னோட உறவினர்கள் தமிழ்நாடு, திருவனந்தபுரம், பெங்களூர்ல இருக்காங்க. அவங்களைப் பார்த்து நாளாச்சு. அதுக்காக இந்தியா வரணும்' என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிற அஜீஸ், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்!

    'சாதிப்பான்யா தமிழன்' என்பதற்கு இன்னொரு உதாரணம், நம்ம அஜீஸ் அன்சாரி!

    English summary
    Indian - Tamil origin comedian Aziz Ansari is rocking in Hollywood
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X