Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பாபா ரீ-ரிலீஸ்..ரஜினி முடிவெடுத்தது எதனால்?..2-கே கிட்ஸை குறி வைக்கும் படமா? ..வெற்றி கிடைக்குமா?
ரஜினிகாந்த் பாபா படத்தை திடீரென ரீ.ரிலீஸ் செய்ய முடிவெடுக்க காரணம் என்ன?
விஜய், கமலின் திடீர் வெற்றியை வைத்து ரஜினிகாந்த் ரசிகர்களின் பல்ஸை பார்க்க முடிவெடுத்துள்ளாரா?
கண்டாரா, பிரம்மாஸ்திரா வெற்றியை அடுத்து பாபாவை ரீ.ரிலீஸ் செய்ய முடிவெடுத்தாரா?
அந்த
போட்டோவை
என்
பொண்டாட்டி
தான்
லீக்
பண்ணா..
’கட்டா
குஸ்தி’
விஷ்ணு
விஷால்
விளக்கம்!

இளம் ஹீரோக்களை எதிர்பார்த்த தமிழ் திரையுலகம்
நடிகர் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தார். சாதாரண நடிகராக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்த ரஜினிகாந்த் அதன் பின்னர் வில்லன், ஹீரோவின் நண்பர் போன்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். 80 களின் ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பெரிய நடிகர்களின் திரைத்துறை வாழ்க்கை இறுதி கட்டத்தை நெருங்கிய நேரம். இளைஞர்களை தமிழக மக்கள் தேடிக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது புதிய வரவாக விஜயகுமார், மாஸ்டர் சேகர், கமல்ஹாசன் போன்றோர் திரைக்கு வந்திருந்தனர். ரஜினிகாந்த் சாதாரண வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஹீரோ லட்சணத்துக்குள் வராத ரஜினி வென்ற கதை
தமிழ் திரை உலகின் ஹீரோ லட்சணத்திற்கு சற்றும் பொருந்தாத தமிழ் உச்சரிப்பு சரியாக வராத ரஜினிகாந்த் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தான் செய்வதை செய்தார். தன்னுடைய மேனரிசத்தையும் தன்னுடைய வித்தியாசமான உச்சரிப்பையும் அவர் தொடர்ந்து செய்தார். பக்கத்து வீட்டு இளைஞர் போல் இருப்பதால் தமிழக மக்கள் அவரை உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள். 77- இல் இருந்து 80-க்குள் ரஜினிகாந்த் பல படங்களில் நடித்து முடித்தார். அதில் பல படங்கள் அவர் இப்போது நினைத்தாலும் செய்ய முடியாத அளவிற்கு சிறப்பான படங்கள் என்று சொல்லலாம். இதை ரஜினிகாந்தே கூறியிருக்கிறார்.

80 களில் தொடங்கிய ராக்கெட் வேக பயணம்
அப்படிப்பட்ட ரஜினிகாந்த் 80-களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார். 80-லிருந்து 90 வரை அவருடைய வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் இருந்தது. அவருடன் திரையில் ஒன்றாக பயணித்த பலரும் காணாமல் போய்விட கமல்ஹாசன் மட்டும் இரண்டாம் இடத்தில் தாக்கு பிடித்து நின்றார். விஜய்காந்த் தவிர மோகன், ராமராஜன் போன்றவர்கள் அவ்வப்போது முன்னுக்கு வந்தாலும் பின்னர் பின்னுக்கு தள்ளப்பட்டனர். ரஜினி, கமல் ஆதிக்கம் 90 கள் கடந்து 2000 ஆண்டின் ஆரம்பம் வரை இருந்தது. இதில் ரஜினி எட்ட முடியாத உயரத்தில் இருந்தார்.

ரஜினியை அரசியலை நோக்கித்தள்ளிய தருணங்கள்
1987 ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு விதமான வெற்றிடம் ஏற்பட்டது. அப்பொழுது ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் அழைத்தனர். ஆனால் எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம் என்று ரஜினி கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை வம்படியாக அப்போதைய அரசியல் சூழ்நிலை அரசியலை நோக்கி தள்ளியது. 91 முதல் 96 வரை தமிழகத்தில் நடந்த அதிமுக ஆட்சியில் பலரும் பாதிக்கப்பட ரஜினிகாந்த் நேரடியாக பாதிக்கப்பட்டார். பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசிய பேச்சு அவருக்கு சிக்கலை கொண்டு வந்தது.

96 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு உதவிய ரஜினி
அவர் பேசுகின்ற வசனங்கள் எல்லாம் அப்போதைய ஆட்சிக்கு எதிரான வசனங்களாக பார்க்கப்பட்டது. ரஜினி விரும்பியோ விரும்பாமலோ அவர் ஒரு இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நேரத்தில் 96 ஆம் ஆண்டு தேர்தல் வந்தது ரஜினியின் நெருங்கிய நண்பரான 'சோ', ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தினார். ஆனால் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் ரஜினி அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. அவருக்கு தங்கத்தட்டில் வைத்து கிடைத்த அருமையான வாய்ப்பை அவர் புறக்கணித்தார். திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்து வாய்ஸ் கொடுத்தார். 96 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ரஜினி கொண்டாடப்பட்டார்.

2 ஆண்டுக்குள் ஒன்றுமில்லாமல் போன ரஜினியின் வாய்ஸ்
ரஜினி வாய்ஸ் என்றால் அதற்கு தனி அந்தஸ்து உண்டு, மக்கள் அவ்வளவு மதிப்பார்கள் என்று அரசியல் கட்சிகளும் நம்பினர். ஆனால் 98 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை. கடுமையாக வீழ்த்தப்பட்ட அதிமுக இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அதிக பாராளுமன்ற தொகுதிகளை பெற்று முன்னுக்கு வந்தது. இதன் பின்னர் ரஜினிகாந்தை அவரே விலகி ஓடினாலும் அரசியல் விடுவதாக இல்லை. அவரை பலரும் சீண்ட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் சொந்தமாக கதை எழுதி சொந்த தயாரிப்பில் பாபா படத்தை எடுத்தார். அதற்கு முன்னர் படையப்பா என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்திருந்த ரஜினி மூன்றாண்டு இடைவெளியில் பாபா படத்தை தானே எழுதி, தயாரித்திருந்தார். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா படத்தில் ரஜினியை புறக்கணித்த ரசிகர்கள்
அந்த படம் ஒரு வகையான ஃபேண்டஸி பிக்சர் என்பதாலும், நம்ப முடியாத காட்சிகள் நவீன உலகில் நடப்பதாக வழக்கமான ரஜினி படத்திலிருந்து வேறு ஸ்டைலில் இருந்ததாலும், ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்த ரஜினிகாந்த் ஆக இல்லாமல் டல்லாக ஒரு விதமாக ரஜினி காட்சி அளித்ததாலும் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடவில்லை. மற்றொருபுறம் பாமக உடன் ரஜினிக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பல இடங்களில் பாபா படத்தை ஓட விடாத சூழ்நிலையே இருந்தது. இதனால் பாபா படம் ரஜினி வாழ்க்கையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான ஒரு தோல்வியை சந்தித்த படமாக இருந்தது.

தோல்வியை வெற்றியாக்கிய சந்திரமுகி படம்
இது ரஜினி மனதில் ஆறாத வடுவாக மாறியது. தனது படம் தோல்வி அடைந்தாலும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டம் அடைய கூடாது என்கிற எண்ணத்தில் அவருடைய நஷ்டத்தை ரஜினி ஈடு கட்டினார். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய தோல்வியை தொடர விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ரஜினிகாந்த் உடனடியாக சாந்தி பிலிம்ஸ் மூலம் சந்திரமுகி படத்தை நடித்துக் கொடுத்தார். இந்த படத்துக்காக அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து புதிய பொலிவுடன் கம்பீரமான ரஜினி ஆக தோன்றினார். வடிவேல் காமெடி ரஜினியின் அசத்தலான தோற்றம் பாடல்கள் என அந்த படம் 800 நாளுக்கு மேல் ஓடியது.

உலகம் முழுவதும் வசூலில் முதல் இடத்தில் ரஜினி
ரஜினி நான் யானை அல்ல குதிரை விழுந்தா சட்டுனு எழுந்து ஓடுகிற குதிரை என்று வெற்றி விழாவில் ரஜினி பேசும் அளவிற்கு பெரிய பெயரை பெற்று தந்தது. அதன் பின்னர் ரஜினிகாந்த் பல வெற்றி படங்களை கொடுத்தார். இன்றளவும் தமிழில் முன்னணி நடிகர், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நடிகர், தமிழகம், தமிழகம் தாண்டி வெளி மாநிலங்கள், ஓவர்சீஸ் மார்க்கெட் என எங்கு திரும்பினாலும் அங்கு கால் பதித்து நிற்பது ரஜினியின் படங்களே. இதுவரை அவருடைய வசூல் சாதனையை முறியடிக்கப்படாமலேயே இருக்கும் நிலையை பார்க்கிறோம்.

என்றும் முன்னணியில் வசூல் சக்ரவர்த்தி ரஜினிகாந்த்
தற்போது வந்த பொன்னியின் செல்வன், விக்ரம் அவருடைய படத்திற்கு இணையாக மட்டும் வந்ததை பார்க்க முடிகிறது. ஆனால் 2.0, கபாலி, எந்திரன், சிவாஜி, அண்ணாத்த என அவருடைய படங்கள் மாறி மாறி கொடுத்த வசூலை எந்த நடிகராலும் நெருங்க முடியாத இடத்தில் ரஜினி இருக்கிறார். ரஜினி, கமலுக்கு பின்னர் வந்த அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய் பெரிய அளவில் முன்னணி நடிகர்களாக வசூல் சக்கரவத்திற்காக இருந்தாலும், ரஜினி அளவிற்கு யாரும் சம்பளத்தில் நெருங்க முடியவில்லை. அவர் அளவிற்கு படம் வசூலை பெற்று தர முடியவில்லை. ஓரளவு அவரை நெருங்கி வருகின்றனர் என்று சொல்லலாம்.

70 வயதை தாண்டி ஓடும் குதிரை ரஜினி
70 வயதை கடந்தும் ரஜினி எனும் குதிரை வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பின்னால் அவரை துரத்தி வரும் மற்ற குதிரைகள் நெருங்க முடியாத அளவிற்கு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் திரையுலகை விட்டு விலகலாம் என்று நினைத்த ரஜினி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரது பயணத்தில் பாபா படத்தின் தோல்வியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று சொல்லலாம்.

புதிய இசை சேர்ப்பு, எடிட்டிங் மூலம் மெருகேற்றல், டிஜிட்டலில் பாபா
இதற்காகவே பாபாவை ரீ-ரிலீஸ் செய்ய மீண்டும் முடிவெடுத்த ரஜினி, இயக்குனரை அழைத்து பேசி கேட்ட பொழுது படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டுமானால் முழுவதுமாக அதை புனரமைக்க வேண்டும் தேவையற்ற காட்சிகளை நீக்க வேண்டும், சில இடங்களில் நீங்களே மறுபடியும் வசனம் பேசும்படி இருக்கும், இசை பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் அதை மெருகேற்ற வேண்டும், படத்தை தற்போதுள்ள டால்பி சிஸ்டத்திற்கு மாற்றி டிஜிட்டலாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்ல என்ன ஆனாலும் செய்யுங்கள் என்று ரஜினி ஒப்புதல் அளிக்க முழு வேகத்தில் அந்த வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் படத்தின் இசையை மெருகூட்டும் வேலையில் இறங்கி விட்டார்.

ஃபாண்டசி ஆன்மிக படங்களுக்கான மவுசை அறுவடை செய்ய நினைக்கும் ரஜினி
ரஜினி தேவையான காட்சிகளுக்கு டப்பிங் பேசி கொடுத்துள்ளார். படத்தை மிகப் பொலிவுடன் ரஜினியின் பிறந்தநாளில் கொண்டுவர முயற்சிகள் நடந்து வருகின்றன. இங்கு இந்த படத்தை ஏன் ரஜினி மீண்டும் திரையிட விரும்புகிறார் என்பது பற்றி பார்த்தால் சமீப காலமாக ஃபேண்டஸி வகை படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. அதிலும் ஆன்மிக வகை பேண்டஸி படங்களுக்கு மவுசு கூடி உள்ளது. ரஜினி நடித்த பாபா படம் வந்த பொழுது குழந்தைகளாக இருந்த பலரும் இன்றைக்கு இளைஞர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு பாபா படத்தை அறிமுகப்படுத்த நினைக்கிறார் ரஜினிகாந்த். இதன் மூலம் ஒரு பெரிய அளவில் வெற்றியை சாதிக்க நினைக்கிறார்.

ரஜினிக்கு அருகில் நெருங்கி வரும் விஜய், கமல், அஜித்
மற்றொருபுறம் என்னதான் ரஜினிகாந்த் ஓடிக் கொண்டிருந்தாலும் அவருக்கு மிக மிக அருகில் நெருங்கி வந்து விட்டார் விஜய். ரஜினியின் சக போட்டியாளராக 1980 முதல் இருந்த கமல்கூட விக்ரம் படம் கொடுத்து 400 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து லைம் லைட்டுக்கு வந்துவிட்டார். ஆகவே ஜெயிலர் படம் வருவதற்கு முன் பாபா படம் மூலம் தனது உண்மையான ரசிகர் கூட்டம் குறித்து பல்ஸ் பார்க்க விரும்புகிறார். அதற்காக பாபா படத்தை ஜெயிலர் படத்துக்கு முன் வெளியிட விரும்புகிறார் ரஜினி என்கிறார்கள்.

தோல்வி படத்தை ஏன் எடுத்து ரீ ரிலீஸ் செய்கிறார்.
மறுபுறம் ரஜினியின் புகழ்பெற்ற வெற்றிப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யாமல் தோல்வி படமான பாபாவை ரீ.ரிலீஸ் செய்து வெளியிட என்ன காரணம் என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது. அதற்கு படத்தின் இயக்குநர் சமீபத்தில் பாபா படம் குறித்த சந்திப்பில் ரஜினியுடன் பேசியது பற்றி கொடுத்த பேட்டியை எடுத்துக்கொள்ளலாம். ஃபாண்டசி வகை அதிலும் ஆன்மிகம் கலந்த ஃபாண்டசி வகை படங்கள் வெற்றிகரமாக ஓடும் காலம், காந்தாரா, பிரம்மாஸ்திரா போன்ற படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன. ஆகவே இந்த நேரத்தில் பாபா படத்தை புதிதாக ரீ மாடிஃபை செய்து வெளியிடுவதன் மூலம் வெற்றிப்படமாக்கினால் பாபா தோல்விக்கு காரணம் அன்றைய அரசியல் சூழலே என்பதை நிரூபித்ததாக இருக்கும், தன்னுடைய சொந்தப்படத்தின் தோல்வியை மாற்ற விரும்புகிறார் ரஜினி என்கின்றனர்.

புது படம் போல் பாபா-வுக்கு செய்யப்படும் ப்ரமோஷன்
பாபா படம் டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாள் அன்று வெளியாகிறது. இந்தப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரஜினி எடுக்கும் முனைப்பு நன்றாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் தினமும் பாபா பற்றிய செய்திகள் அதிகம் பகிரப்படுகிறது. காட்சித்துண்டுகளை வெட்டி ட்விட்டர் பிரபலங்கள் மூலம் ப்ரமோஷன் செய்யப்படுகிறது. என்ன செய்தாலும் பழைய படம் பழைய படம் தான் என்கிற முடிவுக்கும் ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது. என்னதான் புதிதாக செய்துள்ளார்கள் என்று பார்க்கவும் வாய்ப்புள்ளது. இது பான் இந்தியா படமாகவும் ரீ.ரிலீஸ் செய்யப்படுகிறது. புதிய பொலிவுடன் வரும் படம் என்பதால் பாபா கைகொடுப்பார் என்றே தெரிகிறது. முடிவு தமிழ் ரசிகர்கள் கையில்.