»   »  புளு பிலிமில் நான் நடிக்கல-பாபி

புளு பிலிமில் நான் நடிக்கல-பாபி

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனது வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள்தான் என்னைப் போன்ற தோற்றம் உடைய பெண்ணை வைத்துபோலியாக ஆபாச சிடியை தயாரித்து புழக்கத்தில் விட்டுள்ளனர் என்று கவர்ச்சி நடிகை பாபிலோனாபுலம்பியுள்ளார்.

சமீபத்தில் சென்னை சாலிகிராமத்தில் போஸ் என்ற விபச்சார புரோக்கரை போலீஸார் பிடித்தனர். அவருடன் டிவிநடிகை ராதிகாவும் சிக்கினார். சினிமா நடிகைகள், துணை நடிகைகள், பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்துவருபவர் போஸ்.

இவருடைய படங்களில் பாபிலோனா, நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக சி.டி. ஆதாரத்துடன் முரளிஎன்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மாநகர காவல்துறை ஆணையருக்கும் இந்தப் புகாரின் நகலைஅனுப்பியுள்ளார்.

ராதிகாவைக் கைது செய்துள்ள போலீஸார் அடுத்து பாபிலோனாவையும் கைது செய்வார்கள் என பரபரப்புகிளம்பியுள்ளது. இந்த நிலையில் அந்த ஆபாச சிடியில் இருப்பது நான் அல்ல, போலியான சிடி அது என்றுபாபிலோனா கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.

ஆணையர் அலுவலகத்திற்கு வந்து பாபி கொடுத்துள்ள புகாரில் நான் 8 வருடங்களாக சினிமாவில் நடித்துவருகிறேன். 50க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன்.

சமீபத்தில் என்னை சம்பந்தப்படுத்தி தவறான ஒரு செய்தி வந்துள்ளது. எனது சினிமா வாழ்க்கையைக் கெடுக்கும்நோக்கில், ரசிகர்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தும் வகையில், தீட்டப்பட் சதித் திட்டம் இது.

ஆபாசப் படத்தில் நடித்துப் பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் கெளவரமான குடும்பத்தைச்சேர்ந்த பெண். கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப் பயன்படுத்தி என்னைப் போல ஒரு பெண்ணை வைத்து ஆபாசமாகசிடி தயாரித்துள்ளனர். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

இப்படிப்பட்ட சிடியைத் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு மாப்பிள்ளைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார் பாபிலோனா.

பாபி புகார் கொடுக்க வந்தபோது அவருடைய பாட்டியார் கிருஷ்ணகுமாரியும் உடன் வந்திருந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil