»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil


நடிகை பாபிலோனாவால் கடத்தி வரப்பட்ட அவரது கணவரையும், அவரது முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளையும்போலீசார் மீட்டனர்.

மலையாளத்தில் பல புளு பிலிம்களில் நடித்து வந்த பாபிலோனா தமிழில் தை பொறந்தாச்சு மூலம் அறிமுகமானார். இங்கு ஒருபாட்டுக்கு டான்ஸ், காமெடியன்களுக்கு ஜோடி என நடித்து வந்தார்.

சினிமா உலகில் பலான செயல்களுக்குப் பெயர் போன இவரிடம் சத்யமான நடிகர் ஒருவர் சிக்க, அவருக்கு கம்பெனி தந்ததால்,கர்ப்பமானார். இதையடுத்து கர்ப்பத்தைக் காட்டியே மிரட்டி அவரிடம் பணம் பறித்ததால் இவரைப் பார்த்தாலே சபல கேஸ்நடிகர்கள் கூட ஓடி ஒளிவது வழக்கம்.

சென்னை தசரதபுரம் காந்திநகரில் ஒரு பிளாட்டில் தனது பாட்டியுடன் தங்கியுள்ள பாபிலோனா சினிமாவில் நடிப்பதோடு, பிட்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

இந் நிலையில் மலையாளியான அர்ஜூன்தாஸ் (வயது 32) என்பவரை சில மாதங்களுக்கு முன் பாபிலோனா (வயது 24 தானாம்)ரகசியத் திருமணம் செய்து கொண்டார். அப்போது தன்னை சுங்க இலாகா இன்ஸ்பெக்டர் என்று அர்ஜூன் தாஸ் கூறியதாகத்தெரிகிறது.


இந்தத் திருமணம் குறித்து பாபிலோனா வெளியே சொல்லாவிட்டாலும், செய்தி வெளியில் கசிந்தது. திருமணத்துக்காகபாபிலோனாவிடம் 100 பவுன் நகை மற்றும் சில லட்சம் பணத்தையும் அர்ஜூன் தாஸ் வாங்கியதாகத் தெரிகிறது.

திருமணமான சில வாரங்களில், அர்ஜூன் தாஸ் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் அவருக்கு 5,7 வயதில் இரு மகள்கள்இருப்பதும் பாபிலோனாவுக்குத் தெரியவந்துள்ளது. மேலும் அர்ஜூன் சுங்க இலாகா அதிகாரி இல்லை என்பதும், வெட்டி ஆசாமிஎன்றும் தெரியவந்தது.

இதையடுத்து இருவருக்கும் மோதல் வரவே, பாபிலோனாவை விட்டுப் பிரிந்துள்ளார் தாஸ்.

தனது முதல் மனைவி மினி மற்றும் இரு குழந்தைகளுடன் நந்தனத்தில் உள்ள சிஐடி காலனியில் வசித்து வந்தார். இந் நிலையில், நீபோனால் போ, ஆனால், திருமணத்துக்கு நான் தந்த பணத்தையும் நகைகளையும் திருப்பித் தா என அர்ஜூனிடம் பாபிலோனாகேட்டுள்ளார்.

ஆனால், அவற்றைத் திருப்பித் தர அர்ஜூன் மறுத்தால், தனது சகோதரர்களான சுகுமார், பாலு ஆகியோரிடம் சொல்லி அவரைக்கடத்தி வர உத்தரவிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன் அடியாட்களுடன் அர்ஜூனின் வீட்டுக்குச்சென்ற சகோதரர்கள் இருவரும் அவரையும், அவரது இரு குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக அவரது லேன்சர் காரிலேயேஏற்றிக் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் அவரது வீட்டிலிருந்த பைக்கையும் எடுத்து வந்துவிட்டனர். இந்த நேரத்தில் அர்ஜூனின் மனைவி மினி வீட்டில் இல்லை.

அர்ஜூன் மற்றும் குழந்தைகளை தனது வீட்டிலேயே பாபிலோனா ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளார். பணம், நகைகளைக்கேட்டு அர்ஜூனை பாபிலோனாவின் சகோதரர்கள் கடுமையாகத் தாக்கி வந்துள்ளனர்.

கணவர், குழந்தைகள், கார், மோட்டார் சைக்கிளைக் காணாத மனைவி மினி கேரளத்தில் உள்ள தனது தாயாரிடம் விவரத்தைச்சொல்ல அவர் உடனே சென்னை வந்துள்ளார். இருவரும் பல இடங்களில் தேடியும் அர்ஜூன் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் தந்தனர்.

ஆனால், பாபிலோனா-அர்ஜூன் தொடர்பு குறித்து அவர்களிடம் மினி ஏதும் சொல்லவில்லை. இதனால் கே.கே நகர் போலீசார்அர்ஜூன், குழந்தைகளை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந் நிலையில் அர்ஜூனின் வீட்டை ஒரு நபர் மறைந்து நின்று வேவு பார்ப்பதைக் கண்ட போலீசார் அவனை அமுக்கினர்.அவனிடம் விசாரணை நடத்தியபோது தான் பாபிலோனா வீட்டில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அர்ஜூன்தாஸ், குழந்தைகளை மீட்டனர். பாபிலோனா தற்போது துபாயில் கலைநிகழ்ச்சிக்காக சென்றிருப்பதாக அவரது பாட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். திரும்பி வந்தவுடன் அவர் கைதாகலாம் என்றுதெரிகிறது.

பாபிலோனாவில் வீட்டில் இருந்த அவரது இரு சகோதரர்கள், கூலிப் படை ஆட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளர். கடத்திவரப்பட்ட கார், பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil