twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை, ஆனால்...' - சுயசரிதை எழுதுகிறார் பாலு மகேந்திரா!

    By Shankar
    |

    Balu mahendra
    இயக்குநர் பாலு மகேந்திரா தனது சுயசரிதையை எழுதுகிறார்.

    இதற்காக அவர் வலைப்பூ ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

    இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், தமிழ் சினிமாவின் மிக முக்கியமானவராக மாறிப் போனவர் பாலு மகேந்திரா. 30 வருடங்களுக்கு மேல் இயங்கி வருபவர். 22 படங்களை எடுத்துள்ளார். இசை, ஒளிப்பதிவு, அழுத்தமான திரைக்கதை இவர் படங்களின் ஸ்பெஷல்.

    சினிமா என்பது வெறும் வசன ஊடகமல்ல, காட்சி ஊடகம் என்பதை அழுத்தமாக நிரூபித்தவர் பாலுமகேந்திரா.

    தற்போது புதிய படம், இயக்குநர்களுக்கான திரைப்பட பயிற்சிப் பள்ளி என பிஸியாக இயங்கி வரும் அவர், தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்துள்ளார்.

    இதற்காக புதிய ப்ளாக் ஒன்றைத் தொடங்கியுள்ள அவர், தனது முதல் அத்தியாயத்தில் சினிமா மீது தனக்கு வந்த காதலை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளார்.

    இந்த சுயசரிதையின் முன்னுரையில் பாலு மகேந்திரா இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

    என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை.

    இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.

    எனது வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதோ அல்லது எழுதிக் கொள்ளும்படியானதோ அல்ல...'

    English summary
    Ace director Balu Mahendra is writing his autobiography in his recently started blog.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X