பாலு மகேந்திராவின் 'பிள்ளைகள்'!
தன் மாணவர்களை, தன்னிடம் சினிமா வித்தைக் கற்றுக் கொண்டவர்களை உதவியாளர்கள் என பாலு மகேந்திரா ஒருபோதும் விளித்ததில்லை. அவர்களைத் தன் பிள்ளைகள் என்றுதான் மேடைகளில் சுட்டிப் பேசுவார்.
அவரது பிள்ளைகள் பெரும்பாலும் சோடை போவதில்லை. தமிழ் சினிமாவை கட்டி ஆள்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்களில் சிலர்...

பாலா
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் பாலா, பாலு மகேந்திராவின் பிரதான மாணவர்களில் ஒருவர். பாலு மகேந்திரா - அகிலா தம்பதியரையே தன் தாய் தந்தையாகப் பாவிப்பவர். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைக் கூட பாலு மகேந்திரா கையால்தான் பெற்றுக் கொள்வேன் என அடம்பிடித்தவர்.

அமீர்
பாலாவுடன் இணைந்தே இருந்தே ஆரம்ப காலத்தில் பயணித்தவர் என்பதால் அமீரும் பாலு மகேந்திராவின் சீடர்களில் ஒருவர்தான்.

வெற்றிமாறன்
பாலு மகேந்திராவின் இன்னொரு முக்கிய சீடர் வெற்றி மாறன். ஆடுகளம் படத்துக்காக இவர் 6 தேசிய விருதுகளை அள்ளியபோது, பாலு மகேந்திரா அதைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

சீனு ராமசாமி
இன்றைய முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி பாலு மகேந்திராவின் பிரதான சீடர்களில் ஒருவர்.

மாணவர்கள்
இவர்களைத் தவிர, அவரது சினிமா பட்டறையில் பயின்று வெளியில் இயக்குநராகும் முயற்சியில் உள்ள பலரும் பாலு மகேந்திராவின் சிஷ்யப் பிள்ளைகளே. மரணத்துக்குப் பின்னும் நீடித்த வாழ்வு எது என்பதை தனது படைப்புகள் மற்றும் சீடர்கள் மூலம் உலகுக்குப் புரிய வைத்திருக்கிறார் பாலு மகேந்திரா.


Click it and Unblock the Notifications











