twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறுதிவரை என் நண்பர் இளையராஜாவோடுதான்!- பாலு மகேந்திரா

    By Shankar
    |

    மூடுபனியிலிருந்து இளையராஜாவுடன் என் பயணம் தொடர்கிறது. அவரை, அவர் இசையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

    கடைசி வரை என் பயணம் அவரோடுதான் என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா.

    தலைமுறைகள்

    தலைமுறைகள்

    சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலுமகேந்திரா ஒரு படம் இயக்கியுள்ளார். தலைப்பு - தலைமுறைகள். 2005-ல் தனுஷை வைத்து இயக்கிய அது ஒரு கனாக்காலம் படத்துக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம்.

    தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் எம் சசிகுமார் தன் கம்பெனி மூவீஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். பாலுமகேந்திரா கேட்ட ஒரு வார்த்தைக்காக இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்ட சசிகுமார், கடைசி வரை எந்த விஷயம் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பவே இல்லையாம்.

    மூடுபனி தொடங்கி...

    மூடுபனி தொடங்கி...

    இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மூடுபனியில் தொடங்கி இந்தப் படம் வரை பாலுமகேந்திராவின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் இளையராஜா.

    இதுகுறித்து பாலுமகேந்திரா பேசுகையில், "இந்தப் படம் குறித்துப் பேசும்போது, என் நண்பர் இசைஞானி இளையராஜா பற்றி நான் பேசாமலிருக்க முடியாது.

    இளையராஜாவை ஏன் மாற்றணும்?

    இளையராஜாவை ஏன் மாற்றணும்?

    மூடுபனியில் தொடங்கி, இன்று வரை, இனியும் என் படங்களுக்கு அவர்தான் இசை. இளையராஜாவை மாற்றவே மாட்டீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள்.

    ஏன் மாற்ற வேண்டும்? எனக்கும் அவருக்கும் உள்ள புரிதல் அற்புதமானது. ஒருவருக்கொருவர் தினமும் பேசிக் கொள்ளக்கூட தேவையில்லை. ஆனாலும் எங்கள் ஆழமான நட்பு தொடர்கிறது 35 ஆண்டுகளுக்கும் மேலாய்.

    அன்றைய நாளில் பிரபலமாயிருந்த ஜிகே வெங்கடேஷின் உதவியாளராக அவர் இருந்த காலத்திலிருந்தே எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

    அவரை பிடிக்க முடியவில்லை

    அவரை பிடிக்க முடியவில்லை

    என் முதல் படமான அழியாத கோலங்களுக்கே இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும். வேண்டும். ஆனால் அவர் வேகமாக மிக உயரத்தில் போய்க் கொண்டிருந்தார். அவரை என்னால் பிடிக்க முடியவில்லை. மூடுபனி எனக்கு மூன்றாவது படம்... அவருக்கோ 100வது படம்!

    எனது மவுனங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்குரிய மரியாதையைச் செலுத்துபவர் இளையராஜாதான். மூடுபனியிலிருந்து இன்றுவரை என் அத்தனைப் படங்களுக்கும் ராஜாதான் இசை (சந்தியாராகம் தவிர!)

    இளையராஜா இசை ஒரு அங்கம்

    இளையராஜா இசை ஒரு அங்கம்

    எப்போதுமே என் படங்களில் இளையராஜாவின் இசை ஒரு அங்கமாக இருக்கிறது. இந்தப் படத்திலும அப்படித்தான். அவரை யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

    குறைந்த சம்பளம்

    குறைந்த சம்பளம்

    இந்தப் படத்துக்காக ராஜாவை நான் அணுகி, 'ராஜா இது ரொம்ப சின்ன பட்ஜெட் படம். இதுக்கு இவ்வளவுதான் என்னால் கொடுக்க முடியும்' என்று சொன்னபோது, 'இந்தப் பணத்துக்காகவா உங்களுக்கு இசையமைக்கிறேன்,' என்று கேட்டார் ராஜா. நான் கொடுத்த தொகையை சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். வாங்கிக் கொள்வது வேறு.. சந்தோஷமாக வாங்கிக் கொள்வது வேறு.

    கடைசி வரை...

    கடைசி வரை...

    இதுவரை மட்டுமல்ல, இனியும் என் படங்களுக்கு இசை அவர்தான். அதில் மாற்றமில்லை," என்றார் உருக்கமாக.

    இதே விஷயத்தை சில மாதங்களுக்கு முன் நடந்த நீதானே என் பொன்வசந்தம் பட இசை வெளியீட்டின்போதும் பாலு மகேந்திரா சொன்னது நினைவிருக்கலாம். அப்போது, 'இனி நான் ஒரு நான்கு அல்லது ஐந்து படங்கள் செய்வேன் என நினைக்கிறேன். அவற்றுக்கும் நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் ராஜா. இது என் அன்பு வேண்டுகோள்," என்றார் அந்த நிகழ்ச்சியில்.

    English summary
    Director Balu Mahendra says that his relationship with Maestro Ilayarajaa is evergreen and everlasting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X