»   »  கேமராக் கவிஞருக்கு விழா!

கேமராக் கவிஞருக்கு விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேமராக் கவிஞர் பாலு மகேந்திரா 40 வருடங்களை சினிமாவில் முடித்து விட்டார். இதைப் பாராட்டி ஒரு சூப்பர் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பாலு மகேந்திரா என்ற பெயரை உச்சரிக்கும்போது கூடவே தவறாமல் மூன்று வார்த்தைகள் சேர்ந்தே வரும். அது இளையராஜா, தரம், நல்ல நடிப்பு.இந்த மூன்றும் இல்லாத பாலு மகேந்திரா படத்தைப் பார்க்கவே முடியாது.

இந்திய சினிமாவில் 40 வருடங்களைத் தொட்டு விட்டார் பாலு மகேந்திரா. ஆனால் இத்தனை பெரிய கால கட்டகத்தில் அவர் இயக்கிய படங்கள்வெறும் 26தான். இருந்தாலும், 260 படங்களுக்கு சமமான முத்துப் படங்கள் அவை.

மூடுபனியாகட்டும், மூன்றாம் பிறையாகட்டும், மறுபடியும் ஆகட்டும் அல்லது யாத்ரா ஆகட்டும். எந்தப் படத்தை எடுத்தாலும் பல மணி நேரம்உட்கார்ந்து ரசிக்கலாம், பேசலாம், அக்கு வேறு ஆணி வேறாக விவாதிக்கலாம்.

இந்தப் படங்கள் தவிர முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்களில் பாலு மகேந்திராவின் கண்கள், கேமரா மூலம்ரசிகர்களுடன் உறவாடியுள்ளன, அதாவது வெறும் கேமராமேனாக இந்தப் படங்களில் அவர் பணியாற்றியுள்ளார். மூன்றுமே மகேந்திரனின்படங்கள்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் வரும் பருவமே புதிய பாடல் பாடு பாட்டை மறக்க முடியுமா? இளையராஜாவின் இன்னிசையோடு, சத்தம்போடாமல் கண் தொடர்ந்து வந்து பாலுமகேந்திராவின் கேமரா படைத்த விருந்து, எத்தனை முறை சாப்பிட்டாலும் திகட்டாத மஸ்கோத் அல்வா!

பாலுமகேந்திராவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் சினிமாவுக்கு புதிய பெருமை தேடிக் கொடுத்த பழம்பெரும் இயக்குநரானபாலுவுக்கு சென்னையில் ஒரு விழா எடுக்கிறார்கள்.

விழாவின் ஒரு பகுதியாக ஓ 2 ஓ என்ற பெயரில் ஒரு திரைவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கோகிலா முதல் கனாக்காலம் வரைஎன்பது இதன் பொருள்.

கன்னடத்தில் பாலு இயக்கிய கோகிலா தான் அவரின் முதல் படம். அது ஒரு கனாக்காலம் கடைசியாக இயக்கியது. இதையே பெயராக சூட்டி கே டூகே என்று பெயரிட்டுள்ளனர்.

கோகிலா முதல் அது ஒரு கனாக்காலம் வரை உள்ள பாலுமகேந்திராவின் சில படங்களை தேர்வு செய்து அவற்றை ஐனாக்ஸ் திரையரங்கில்திரையிடுகின்றனர்.

பாலுவுக்கு பாராட்டு விழா ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவை சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்தினம் மற்றும் பாலுவின் நலம் விரும்பிகள், திரையுலகபெரும்புள்ளிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

முதல்வர் கருணாநிதியையும் விழாவுக்கு அழைக்க பாலுவின் மகன் சாங்கி முயற்சி மேற்கொண்டுள்ளார். விழா தொடர்பான விவரங்களைமுதல்வருக்கு அவர் கொடுத்து அன்போடு அழைப்பும் விடுத்துள்ளார். முதல்வர் சொல்லப் போகும் ம் என்ற சொல்லுக்காக ஆவலோடுகாத்திருக்கிறார்.

ஒரு கலைஞனைப் பாராட்ட வேண்டும் என்றால் அவன் உயிருடன் இருக்கும்போதே அதைச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார் பாலு.இப்போது அவரது சிஷ்யப் பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து தங்களது குருவின் திரையுலக நாற்பதாண்டு விழாவை மனம் குளிரஎடுக்கவுள்ளனர்.

பாலுவுக்கு வயதாகியிருக்கலாம், ஆனால் அவரது கேமரா கண்களுக்கு ஓய்வேது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil