பேங்க் பணியாளர் டூ டாப் டைரக்டர்...ஹேப்பி பர்த் டே லோகேஷ் கனகராஜ்

சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது கமலை வைத்து இயக்கி முடித்துள்ள விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க உள்ள விஜய்யின் தளபதி 67 ஆகியவற்றை குறிப்பிட்டு லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஊக்கம் தந்த கார்த்திக் சுப்பராஜ்

ஊக்கம் தந்த கார்த்திக் சுப்பராஜ்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ் எம்பிஏ படித்தவர். ஃபேஷன் டெக்னாலஜியும் முடித்த லோகேஷ், வங்கிப் பணியாளராக பணியாற்றி வந்தார். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசையால் காலம் என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கி, குறும்பட போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டிக்கு நடுவராக வந்திருந்த கார்த்திக் சுப்பராஜ், தொடர்ந்து படம் இயக்கும் படி இவரை ஊக்கப்படுத்தி உள்ளார்.

முதல் வெற்றியை தந்த கைதி

முதல் வெற்றியை தந்த கைதி

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பிலேயே அவியல் என்ற ஆன்த்தாலஜியை இயக்கி டைரக்டராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். தனது முதல் படமாக மாநகரம் படத்தை இயக்கி டைரக்டராக கோலிவுட்டிற்குள் என்ட்ரி ஆனார் லோகேஷ். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் மாநகரம் படத்தை இயக்கினார். தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியை வைத்து கைது படத்தை ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்கினார். இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த வெற்றி

அடுத்தடுத்த வெற்றி

ஹீரோயின், பாடல்கள் என ஏதும் இல்லாமல் கைதி படத்தை இயக்கி வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்திலேயே இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாகி 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தில் சிறை கைதியாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்கள் பட்டியலில் இணைந்த லோகேஷ், தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தையும் இயக்க உள்ளார்.

ரஜினியை இயக்க பிளான்

ரஜினியை இயக்க பிளான்

சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் வெள்ள ராஜா என்ற சீரியலில் இணை எழுத்தாளராகவும் லோகேஷ் கனகராஜ் பணியாற்றி உள்ளார். கார்த்தி, விஜய், கமல் என டாப் ஹீரோக்களை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினியிடமும் ஒரு கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க தான் பிளான் செய்திருந்தார். ஆனால் ரஜினி, அண்ணாத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக இருந்ததாலும், தனது நீண்ட நாள் கனவான கமலை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததாலும் விக்ரம் படத்தை துவக்கி விட்டார் லோகேஷ்.

டாப் ஹீரோக்களை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்த டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு நாமும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வோம். அவரின் விக்ரம் படமும், அடுத்து இயக்க உள்ள படங்களும் வெற்றி அடைய வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X