»   »  இது பாணு புராணம்!

இது பாணு புராணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள தாமிரபரணி படத்தில் நடித்து வரும் கேரளத்து வரவான பானுவுக்கு ஏகப்பட்ட ஆபர்கள்வந்து குவிய ஆரம்பித்துவிட்டன. ஆனால், தாமிரபரணி முடிந்த பிறகே வேறு வாய்ப்புக்களை ஏற்றுக் கொள்வதென தீர்மானாய்இருக்கிறார் பாணு.

கேரளாவில் எர்ணாகுளம் அருகே உள்ள கோதமங்கலம் தான் பாணுவின் சொந்த ஊராம். அப்பா ஜார்ஜ் வியாபாரத்தில்இருக்கிறார். அம்மாவின் பெயர் ஷாலியாம்.

பாணுவுககு கூட பிறந்தவர் அக்கா தோஷி. அவர் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்க, 10ம் வகுப்பை முடித்துவிட்டுபிரைவேட்டாக பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்த பாணு ஹீரோயின் ஆகிவிட்டார்.

பள்ளியில் படிக்கும்போது கலை நிகழ்ச்சிகள், நாடகம் என்று ஒரு கூத்தையும் விடாமல் எல்லாவற்றிலும் பங்கேற்பாராம் பாணு.அப்போதே பார்க்க அசத்தலாக இருப்பார் என்பதால், நீ பேசம சினிமாவுக்குப் போயிடு என கொம்பு சீவி விட்டார்கள் உடன்படித்தவர்கள்.

ஓவராகவே உசுப்பேத்தப்பட்டதால் ஒரு கட்டத்தில் நாம் நடிகையனா என்ன என்ற கேள்வி பாணுவுக்கு வந்துவிட்டதாம்.இதையடுத்து சினிமாவுக்காக தயாராகியிருக்கிறார்.டான்ஸ் கற்றுக் கொண்டாராம்.

டான்ஸ் கிளாசில் இவரைப் பார்த்த சில பார்ட்டிகள் கலை நிகழ்ச்சிகளுக்காக துபாய், கத்தார், பஹ்ரைன் என்று கூட்டிப் போகஆரம்பித்தார்களாம். அதைப் பார்த்த சூர்யா டிவி பாணுவை காம்பியரிங் செய்ய வைத்தது.

இதையடுத்து தனது ஆல்பத்தை தயாரித்து மலையாளத் திரையுலகில் சுற்ற விட்டுள்ளார் பாணு. இந்தப் போட்டோக்கள்டைரக்டர் லால் ஜோசிடம் போக அவர் தனது படத்தில் ஹீரோயினே ஆக்கிவிட்டார்.

இந்தப் படத்தை பார்த்த தெலுங்கு டைரக்டர் ஒருவர் தனது "போட்டோ என்ற படத்தில் பாணுவை புக் செய்ய, அந்தப் படத்தின்சூட்டிங்குக்கு எதார்த்தமாக போன இயக்குனர் ஹரியின் கண்ணில் பதார்த்தமாக பாணு பட்டுவிட, நீ தான் அடுத்தநயனதாரா என்று வாக்கு கொடுத்து அப்படியே தமிழுக்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாராம்.

நயனதாராவை அய்யா படத்தில் அறிமுகம் செய்தது ஹரி தான் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil