மங்காத்தாவில் பாரதியின் பேரன் பாட்டு!!
வெங்கட் பிரபு இயக்கும் அஜீத்தின் பொன் விழாப் படமான மங்காத்தாவில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பேரன் நிரஞ்சன் பாரதி பாடல் ஆசிரியராக அறிமுகமாகிறார்.
க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. மே 1-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக வெங்கட் பிரபு படங்களில் வாலியும் கங்கை அமரனும்தான் பாடல்கள் எழுதுவார்கள். இந்த முறை புதிதாக நிரஞ்சன் பாரதியை அறிமுகப்படுத்துகிறார் வெங்கட் பிரபு.
இவர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களில் ஒன்றை இவர் எழுதுகிறார். மற்றவற்றை வாலியும் கங்கை அமரனும் எழுதுகிறார்கள்.
More from Filmibeat
நிரஞ்சன் பாரதி பாடலாசிரியர் மகாகவி பாரதி மங்காத்தா வெங்கட் பிரபு lyricist mahakavi barathi mangatha niranjan barathi venkat prabhu


Click it and Unblock the Notifications











