»   »  ஏனென்றால் அவர் ரஜினி...!

ஏனென்றால் அவர் ரஜினி...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவப்பானவர்கள்தான் ஹீரோ ஆக முடியும் என்பதை உடைத்தவர்.

தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் கலாசாரத்தை தொடங்கி வைத்தவர்.

குழந்தைகளுக்கும் பிடித்த முதல் தமிழ் சினிமா ஹீரோ.

நடையின் வேகத்துக்கு நாம் எல்லோரும் அடிமை.

சிக்ஸ்பேக் இல்லாமலேயே ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுப்பவர்.

 Because he is Rajini!

சினிமாவை தவிர பிற இடங்களில் எளிமையாகவே வலம் வருபவர்.

துணிச்சலாக பேசுபவர்.துணிச்சலாக பேசினால் ஆதரவு தருபவர்.

உலக நாடுகளில் அதிக நாட்டு மக்களை கவர்ந்த ஒரே தமிழ் ஹீரோ.

அவருக்கு ரசிகனாக இருப்பதே பெருமை என காலர் தூக்க வைத்தவர்.

தன் முதல் காதல் தோல்வியில் முடிந்ததை அதுவும் ஒரு பெண் தன்னை
பிடிக்கவில்லை என சொன்னதை ஓப்பனாக சொன்னவர்.

ரசிகர்களை உரிமையுடன் கண்ணா என அழைப்பவர்.

தமிழ் சினிமாவுக்கே வேகம் கூட்டியவர்.

சக நடிகர்களுக்கும் பிடித்தவர்.

தலைமுறை தான்டி இன்றைய குழந்தைகளுக்கும் பிடித்த ஹீரோ.

எல்லா அரசியல் தலைவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நெருக்கமாக இருப்பவர்.

அவர் பெயரை பயன்படுத்தி தான் பிற ஹீரோக்கள் கைதட்டு வாங்குவார்கள். அவர்
இதுவரை பயன்படுத்தியது இல்லை.

அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்.

ரசிகர்களின் குடும்பங்களின் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரே ஹீரோ.

அவர் இடத்தை பிடிக்க தான் அஜித் முதல் சிவகார்த்திகேயன் வரை ஆசைப்படுகிறார்கள்.

தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதை இன்னும் மறக்காதவர்.

தன் குரு பாலசந்தரை உயிராக நினைப்பவர்.

தான் சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து கமலின் திறமைக்கு மரியாதை கொடுப்பவர்.

மது, மாது, சிகரெட் என தன்க்கிருந்த பழக்கங்களை வெளிப்படையாக சொன்ன ஒரே ஹீரோ.

மாறுவேடத்தில் சென்று மக்களோடு மக்களாக பழகும் ஹீரோ.

- க.ராஜீவ் காந்தி

பிகு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை வார்தா புயல் ஆக்கிரமித்துக் கொண்டது. அதனால் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரைகள் இந்த மாதம் முழுவதும் தொடரும்!

English summary
A special article on superstar Rajinikanth.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil