Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"லவ் யூ" - இதையே எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறது தமிழ் சினிமா #ValentinesDay
Recommended Video
சென்னை : ஒவ்வொரு காதலர் தினத்திலும் தங்களின் மற்றொரு பாதியாக்கிக்கொள்ள காதல் மொழி பேசுகிறார்கள் பலர். காதலர்கள் பேசுவதாலேயே எந்த மொழியும் தேனாகிறது.
ஒவ்வொருவரும் தனித்துவமான மொழிப் பிரயத்தனங்களின் மூலம் காதல் பகிர்கிறார்கள். காதலித்தலில் காதல் சொல்லல் முக்கியப் பங்காற்றுகிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக இருக்கக்கூடியதல்லவா அது.
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வந்த சிறந்த, மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட சில காதல் காட்சிகளின் வசனங்களை இங்கே பார்ப்போம். இதில் விடுபட்டுப்போன உங்களுக்கு விருப்பமான வசனங்களை கமென்ட்டில் பதிவிடலாம்.
அலைபாயுதே
நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கேனு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு..!
குக்கூ
அசிங்கமாயிருந்தா... விட்டுருவியா
எவனாச்சும் உசுர விடுவானா?
தளபதி
என்கிட்ட எதை வேணும்னாலும் கேளு கொடுக்கிறேன் என் உயிரைத் தவிர, ஏன்னா நான் உன்கூட வாழனும்
பிடிக்கலையா ? பிடிச்சிருக்கு. அதுக்கு ஏன் அழற? தெரியல
மெட்ராஸ்
இப்ப என்ன வேணும்? நீ தான் வேணும், கல்யாணம் பண்ணிக்கிறியா?
விண்ணைத்தாண்டி வருவாயா
இந்த உலகத்துல எத்தனையோ பேரு இருக்கும் போது, நா உன்ன மட்டும் ஏன் லவ் பண்ணேன் ஜெஸ்சி?
ரெண்டு நிமிசத்துலேயே சொல்லியிருப்பேன்.
வாரணம் ஆயிரம்
ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன். நான் இத சொல்லியே ஆகணும், நீ அவ்வளவு அழகு. And I Think i am in love with you.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
தினமும் நான் சண்ட போடுவேன், வெறுப்பேன், கோபப்படுவேன், தலைய பிச்சிக்க வெப்பேன். ஆனாலும் நான் சந்தோஷமா இருப்பேன். காரணம் இன்னைக்கு உள்ளுக்குள் இருக்கும் அழகையும் பாக்கனும்னு பக்குவம் வந்திருச்சு.
தனி ஒருவன்
எனக்கு ப்ரொபோஸ் எல்லாம் பண்ண தெரியாது. முன்னப்பின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.
விண்ணைத்தாண்டி வருவாயா
உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் இனிமே, உன்னைத் தவிர.
பீமா
நான் கொஞ்சம் அழுவேன் பொறுத்துக்கோ..!
காக்க காக்க
நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கனும், உங்க கூட சிரிச்சுப் பேசணும், சண்ட போடணும், இன்னைக்கு மாதிரியே எப்பவும் நான் உங்க மேல பைத்தியமா இருக்கனும்.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
எனக்கு அவங்கள பிடிச்சுருக்கு நா ஏன் அவங்ககிட்ட சொல்லணும்..? அவங்களுக்கு தெரியாதா என்ன?
பெங்களூர் நாட்கள்
எனக்கு உங்க பின்னாடி நடக்கணும்னு இஷ்டமே இல்ல, உன் கூடவே நடக்கணும்.
இந்த மாதிரியான உங்களுக்கு பிடித்த லவ் ப்ரொபோசல் டயலாக்குகளை கமென்ட்டில் குறிப்பிடலாம்.