»   »  பானுவை விரட்டும் கிளாமர்

பானுவை விரட்டும் கிளாமர்

Subscribe to Oneindia Tamil

தாமிரபரணி சூப்பராக ஓடிக் கொண்டிருப்பதால் விஷாலை விட சந்தோஷமாகஇருக்கிறார் நாயகி பானு.

திருச்சூர் தந்த அழகுத் திருவிளக்குதான் பானு. முதல் படமே படு ஹிட் ஆகிவிட்டதாலும் வாய்ப்புக்கள் தேடி வர ஆரம்பித்துவிட்டதாலும் பயங்கர குஷியில்இருக்கிறார்.

படப்பிடிப்பின்போதே பானுவின் நடிப்பை இயக்குநர் ஹரி உள்ளிட்ட அனைவருமேபாராட்டினார்களாம். அத்தோடு, நயனதாரா, ஆசின் அளவுக்கு நீங்களும் புகழ்பெறுவீர்கள் எனவும் ஏத்தி விட்டுள்ளனர். இதனால் படத்தின் ரிசல்ட்டை வெகுவாகஎதிர்பார்த்துக் கொண்டிருந்தார் பானு.

இப்போது விஜய், அஜீத் படங்களை விட தாமிரபரணிக்குத்தான் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பு என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்திருப்பதால் பானு படாமகிழ்ச்சியில் இருக்கிறார்.

முதல் படம் என்றாலும் பானு படு தெளிவாக நடித்திருந்தார். குடும்ப பாங்கான ரோல்என்றாலும் கூட பாடல் காட்சிகளில் அவர் காட்டிய வளைவு, சுளிவுகள்தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ஈர்த்துள்ளதாம்.

இதனால் சில புதிய பட வாய்ப்புகள் பானுவைத் தேடி ஓடி வந்துள்ளன. அவர்களில்தெலுங்குப் பட தயாரிப்பாளர்களும் அடக்கம். அங்கு ஏற்கனவே இந்த சேச்சி முக்தாஎன்ற பெயரில் சில படங்களில் நடித்து அவுட் ஆனவராம்.

தாமிரபரணியின் தெலுங்கு டப்பிங்கும் பிய்த்துக் கொண்டு ஓடுவதால் இப்போதுமீண்டும் இவரை தெலுங்கு அழைக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் தெலுங்குப் பட வாய்ப்புகளில் ஏகத்துக்கும் கிளாமரை சேர்த்து கதைசொல்வதால் அந்த வாய்ப்புக்களை ஏற்பதா இல்லையா என்ற தயக்கத்தில் இருக்கிறார்பானு.

பானு ஃபீல்டுக்கு வந்தபோதே கிளாமராக நடிப்பதில்லை என்று கங்கணம்கட்டியிருந்தார். ஆனால் இப்போது கிளாமர் காட்டும் வாய்ப்புகள் வந்துள்ளதால்குழப்பமாம்.

தெலுங்கில் பாட்டி ரோலில் நடித்தாலே கிளாமர் டோஸ்ட் கொடுத்துத்தான்எடுப்பார்கள். ஹீரோயின் என்றால் சொல்லவே வேண்டாம், ஒரே முக்கி எடுத்துவிடுவார்கள்.

இதுதான் பானுவுக்கு கவலையைக் கொடுத்துள்ளதாம். தனது உடல் வாகுக்குஜாலியான பொண்ணாக, துடுக்குத்தனம் நிறைந்த பொண்ணாக நடித்தால்தான்வாட்டமாக இருக்கும் என நம்புகிறார்.

ஆனால், தெலுங்கு அள்ளித் தரும் பணம் கொஞ்ச நஞ்சம் இல்லை என்பதால் பானுதன் விரதத்தை உடைத்துக் கொண்டு கிளாமர் கடலில் குதித்தே ஆவார் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil