»   »  பார்த்திக்கு செக் வைத்த பாரதி

பார்த்திக்கு செக் வைத்த பாரதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதுதான் ஷூட்டிங்கே ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது அம்முவாகிய நான் படப்பிடிப்பு தளம்.

புதுவைப் பித்தன் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்முவாகிய நான்படத்திற்காக மேக்கப் போட ஆரம்பித்துள்ளார். எழுத்தாளராக இதில் தலைகாட்டுகிறார் பார்த்தி.

விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணை சந்திக்கிறார். அவளதுஅனுபவங்களை தொடராக எழுதுகிறார். அப்படியே அந்தப் பெண் மீது காதல்கொள்கிறார். இது எங்கே போய் முடிகிறது, அப்பெண் பார்த்திபனை ஏற்றுக்கொள்கிறாரா என்பதுதான் கதையாம்.

இப்படத்தில் விபச்சாரப் பெண் வேடத்தில் பாரதி கலக்கலாக நடிக்கிறார். படம்முழுவதும் விபச்சாரப் பெண்ணாகவே வர வேண்டும், ஏடாகூடமான காட்சிகளில்நடிக்க வேண்டியிருக்கும் என்பதை பாரதியிடம் தெளிவாகச் சொல்லியே புக்பண்ணியுள்ளாராம் இயக்குனர் பத்மாமகன்.

பாரதியும் எப்படியும் நடிக்கத் தயார் என்று டைரக்டருக்கே தைரியம் சொல்லித் தான்நடிக்க வந்துள்ளார். நடிக்க வந்த பிறகு செட்டில் யார் யாரிடம் எப்படிப் பழகவேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொண்டு அதன்படி நடந்துவருகிறாராம் பாரதி.

எதற்காக இந்த முன் எச்சரிக்கை தெரியுமா? தேவையில்லாமல் சிலரிடம் சிக்கிசர்ச்சையில் மாட்டி விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி தனக்குத்தானே ஒருஎல்லைக் கோட்டைப் போட்டுக் கொண்டுள்ளாராம் பாரதி.

குறிப்பாக பார்த்திபனை டீல் செய்வதில் படு ஜாக்கிரதையாக இருக்கிறாராம் பாரதி.ஹீரோயின்களிடம், குறிப்பாக அழகு நாயகிகளிடம் படு ஆர்வமாக இருப்பார்பார்த்திபன். இதை பலர் மூலம் அறிந்து கொண்ட பாரதி, பார்த்திபனிடம் படுகேர்ஃபுல்லாக இருக்கிறாராம்.

முதல் நாளிலேயே உங்களை நடிப்புலகில் எனக்கு காட்பாதர் போல நினைக்கிறேன்,அதாவது கிட்டத்தட்ட அப்பா போல நினைக்கிறேன் என்று கூறி ஆடிப் போக வைத்துவிட்டாராம். இருந்தாலும் பார்த்தி படு நிதானமாக இதை எடுத்துக் கொண்டுவிக்கிரமாதித்தன் போல தனது முயற்சிகளை ஆரம்பித்துள்ளாராம்.

கலாட்டா ஏதும் இல்லாமல் படத்தை முடித்தால் சரி என்ற கவலையில் படத்தின்தயாரிப்பாளர் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொள்ளஆரம்பித்துள்ளாராம்.

அட தேவுடா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil