twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் ஓர் அடையாளம்…பாரதிராஜா பிறந்த நாள் ஸ்பெஷல் !

    |

    சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவின் ஓர் அடையாளமாகவே இருக்கிறார். இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் காலத்தால் அழியாத காவியமாகவே உள்ளது.

    நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த சினிமாவை வயல்மேடுகள்,கடல் அலைகள், பரந்து விரிந்த மலைகள் என காட்சிக்கு காட்சி அழகுப்படுத்தியவர் பாரதி ராஜா. தமிழ் சினிமாவை உணர்வின் குவியலாக்கிய பெருமை இவரையே சேரும்.

    இன்று 81வது பிறந்த நாளை கொண்டாடும் பாரதிராஜாவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் அடையாளமான பாரதிராஜா குறித்து ஒரு ஸ்பெஷல் ரவுண்டப்.

    பாரதிராஜாவிற்கு தேசிய விருது பெற்று தந்த சினிமாக்கள்...எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க பாரதிராஜாவிற்கு தேசிய விருது பெற்று தந்த சினிமாக்கள்...எதுன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

     பாரதிராஜா

    பாரதிராஜா

    என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரரான பாரதிராஜா 1941ம் ஆண்டு ஜூலை 17ந் தேதி பெரிய மாயத்தேவர் என்பவருக்கும் கருத்தம்மா தம்பதியினருக்கும் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். சின்னசாமி என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜாவுக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் என பெரிய குடும்பம்.

    சினிமா மீது காதல்

    சினிமா மீது காதல்

    பள்ளியில் படிக்கும் போதே இலக்கியத்தின் மீது இவருக்கு ஈடுபாடு இருந்தால் நாடகம் எழுதுவது, இயக்குவது, நடிப்பது என ஆர்வமாக இருந்தார். ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை ஆகிய நாடகங்களை எழுதினார். சினிமா மீது பாரதிராஜாவுக்கு இருந்த காதல் அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. பல இடங்களில் அலைந்து திரிந்த இவர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக சேர்ந்து தனது சினிமா கனவுக்கு தூபம் போட்டார்.

    16 வயதினிலே

    16 வயதினிலே

    ஆசையும், கனவும், விடா முயற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடைந்துவிடமுடியும் என்பதை நிரூபித்த பாரதிராஜா. 1977ம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து 16 வயதினிலே என்ற படத்தை இயக்கினார். கிராமத்து பின்னணி கொண்ட கதைக்களத்தில், ஸ்ரீதேவியை மயிலாக உலவவிட்டிருந்தார். அப்போது, கதாநாயகனாக கலக்கி வந்த கமலை சப்பாணி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார்.

    சினிமாவின் நாயகன்

    சினிமாவின் நாயகன்

    சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என உணர்வுகள் இழையாடும் காலத்தால் என்றும் அழியாத பல திரைப்படங்களைக் கொடுத்து காலங்கள் பல கடந்து தமிழ் சினிமாவின் நாயகனாகவே உள்ளார்.

    பலர் அறிமுகம்

    பலர் அறிமுகம்

    வைரமுத்து, பாக்யராஜ், மணிவண்ணன் எனத் தொடங்கி எண்ணிலடங்கா கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். 20-ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளுக்கான தமிழ் சினிமா கதாநாயகிகள் ராதிகா, ராதா, ரேவதி, வடிக்கரசி என பெரும்பாலும் இவர் பட்டறையில் வளர்ந்தவர்கள்.

    பல விருதுகள்

    பல விருதுகள்

    6 தேசிய விருது,பத்ம ஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசின் மாநில விருது, நந்தி விருது என பல விருதுகளை பெற்ற பாரதிராஜா, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குநர்களில் தனக்கென தனி ஸ்டைலை வைக்கும் பாரதிராஜா. வித்தியாசமான சிந்தனை, சமூக அக்கறை என இவரின் ஒவ்வொரு திரைப்படமும் ஓராயிரம் கதை பேசும் படங்களாக என்றும் நிலைத்து இருக்கும்.

    English summary
    Director Bharathiraja Birthday Special Roundup
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X