ஸ்பெஷல்ஸ்

By Staff

பாரதிராஜா ஏகப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். தனது அடுத்த படமான ஈர நிலம் சூப்பராக வந்திருப்பதாகப்ரிவீயூ பார்த்தவர்கள் அனைவரும் கூறியதால் புதுத் தெம்புடன் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில்இறங்கியுள்ளார்.

மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் பாரதிராஜா இயக்கியிருக்கும் படம் ஈர நிலம். முதலில் படத்தை பாரதிராஜா தான்தயாரித்தார். ஆனால், இடையில் பைனான்ஸ் பிரச்சனை வந்துவிட இன்னொரு தயாரிப்பாளர் படத்தை டேக் ஓவர்செய்தார்.

தொடர்ந்து சில தோல்விகளால் துவண்டு போயிருக்கும் பாரதிராஜா, தனது உழைப்பு அனைத்தையும் இதில்கொட்டியிருப்பதாகக் கூறுகிறார். படத்தை பார்த்து பார்த்து இழைத்துள்ளாராம்.

பாரதிராஜாவின் பாணியை பார்த்து பல காலமாகி விட்டதே என்ற வருத்தத்தில் இருப்பவர்களுக்கு சரியானதீனியாக இந்தப் படம் இருக்குமாம்.

மனோஜுக்கும் இந்தப் படமாவது பிரேக் தருமா என்பதைப் பார்க்கவேண்டும்.

புதுமுகம் நந்திதாவும் அற்புதமாக நடித்துள்ளாராம். என்னமா நடிக்குது அந்தப் பொண்ணு என்று பாரதிராஜாவேபாராட்டுகிறார்.

கோபக்கார டைரக்டரிடம் அறை வாங்காமலேயே சூட்டிங்கை முடித்த முதல் நடிகை இவராகத் தான் இருக்கும்என்கிறார்கள்.

ராதிகா, ராதா என எல்லோருமே பாரதிராஜாவிடம் பலமுறை பளார் வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X