பாரதிராஜா படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்!!!

By Chakra

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வருகிறார் பாரதிராஜா. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கலாம் எனத் தெரிகிறது.

கடைசியாக பாரதிராஜா இயக்கிய படம் பொம்மலாட்டம். இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நன்றாகப் பேசப்பட்டது. அதன் பிறகு இயக்கவில்லை பாரதிராஜா. இலங்கைத் தமிழர்கள் விஷயமாக கொஞ்ச காலம் குரல் கொடுத்து வந்தார். பிறகு அந்த குரலும் கம்மிப் போய், சுத்தமாக அமைதியாகி விட்டார்.

இந்த நிலையில் மீண்டும் இயக்கக் கிளம்பியுள்ளார் பாரதிராஜா. கிழக்குச் சீமையிலே படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான தென் கிழக்குச் சீமையிலே என்ற வார்த்தையேயே தனது அடுத்த படத்திற்குத் தலைப்பாக்கியுள்ளார்.

இப்படத்தில் பாரதிராஜாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது மகன்களாக சீமானும், அமீரும் நடிக்கவுள்ளனராம். மிகமிக வித்தியாசமான கோணத்தில் இப்படத்தில் கிராமத்தைக் காட்டப் போகிறார் பாரதிராஜா என்கிறார்கள்.

முக்கியமான விஷயம் இப்படத்தின் இசையமைப்பாளர். இளையராஜா இல்லை என்றாகி விட்டது. ஏ.ஆர்.ரஹ்மானும் இப்படத்திற்கு இசையமைக்கவில்லையாம். மாறாக, ஹாரிஸ் ஜெயராஜுடன் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

'ஓமகசீயா' டைப்பில் பாரதிராஜாவின் நாயகி வித்தியாசமாக பாடப் போவதை கேட்க இப்பவே காத்திருப்போம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X