twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மண் மனம் மாறாத கிராமத்து வாழ்க்கையை படம் பிடித்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா

    |

    Recommended Video

    சினிமாவை திரித்து எழுதியவரின் பயணம் | History of Bharathiraja

    சென்னை: கிராமிய மண் வாசனைக்கும், அழுத்தமான நடிப்புக்கும், அழுக்கான உடையனிந்த ஆனால் வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வெளிப்படுத்துவது இயக்குநர் பாரதிராஜா படைப்புகளின் முத்திரை.

    என இனிய தமிழ் மக்களே நான் உங்கள் பாரதிராஜா பேசுகிறேன். இந்த வரிகளை கேட்டாலே நாம் நெஞ்சத்தில் ஒரு பசுமையை கொண்டு வருபவர் நம் தேனீ மாவட்ட கிராமிய கலைஞர் பாரதிராஜா. பல உதவியாளர்களை இயக்குனர்களாக உருவாக்கியவர்.

    தமிழ் சினிமா தோன்றிய காலம் தொட்டு ஸ்டுடியோவிற்குள்ளேயே செட் போட்டு படம் எடுத்துக்கொண்டு, நாங்கள் அவுட்டோர் சூட்டிங் எல்லாம் எடுக்கவே மாட்டோம் என்று அடம் பிடித்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை, இயற்கையோடு ஒன்றிய கிராமங்களுக்கு கைபிடித்து அழைத்துச் சென்ற பெருமை நம் இயக்குநர் இமயம் பாராதிராஜாவையே சேரும்.

    பாரதிராஜா

    பாரதிராஜா

    தன்னுடை முதல் படைப்பான 16 வயதினிலே படத்திலேயே, யாரப்பா இந்த பாரதிராஜா என்று இந்திய சினிமாவையே தன்னைப் பற்றி பேசவைத்த பெருமைக்கு சொந்தக்காரர். இந்தப் படத்திற்கு பின்பு தான், ஓஹோ இப்படிக் கூட படம் எடுக்கலாமோ என்று இந்திய சினிமாவை யோசிக்க வைத்தவர்.

    இயக்குநர் இமயம்

    இயக்குநர் இமயம்

    இன்று தமிழ் திரையுலகில் வெற்றிபெற்ற கணக்கில் அடங்கா கலைஞர்களின் குருவாக விளங்கியவர் நம் கிராமிய இயக்குனர் பாரதிராஜா என்றல் அது மிகையல்ல. இயக்குனர் இமயம் என்று அவர் அழைக்கப்படுவதற்கு ஏற்ப அவர் இமய மலையை போன்ற அளவு ஆற்றல் படைத்தவர். நம் தமிழ் கலாச்சாரத்தை, கிராமிய நாட்டுப்புற கதைகளை நம் கண் முன்னே அச்சுஅசலாக நிறுத்திக்காட்டியவர்.

    தரமான படைப்புகள்

    தரமான படைப்புகள்

    அவரின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கல்லுக்குள் ஈரம், முதல் மரியாதை, மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, பசும்பொன் போன்ற தரமான படைப்புகள் மூலம் நம்மிடையே மரியாதைக்குரிய மனிதராக கொண்டாடப்பட்டவர்.

    கிராமத்து வாழ்க்கை

    கிராமத்து வாழ்க்கை

    பாரதிராஜாவின் படைப்புகள் கிராமிய மண் வாசனைக்கும், அழுத்தமான நடிப்புக்கும், அழுக்கான உடையனிந்த ஆனால் வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வெளிப்படுத்துவது அவரது படைப்புகளின் முத்திரை.

    பத்மஸ்ரீ பாரதிராஜா

    பத்மஸ்ரீ பாரதிராஜா

    இந்தியா திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பை சிறப்பிப்பதற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
    தமிழ், இந்தி, தெலுங்கு என மொத்தம் நாற்பது படங்களுக்கும் மேலான தரமான படைப்புகள் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் புரட்சியாளர் என்ற பெருமை பாரதிராஜாவையே சேரும்.

    English summary
    Director Bharathiraja's work is the epitome of rural mudslides, complimentary acting and the life of dirty-looking but white-minded villagers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X