twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியில் இயக்குனர் இமயம் என் இனிய தமிழ் மக்களே..என தன் கம்பீரக் குரலாலும் உயிரோட்டக் கதைகளாலும் தமிழ் சினிமாவை ஆண்டமுடிசூடா மன்னன் பாரதிராஜா முதன்முதலாய் இந்தியில் காலடி எடுத்து வைக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல், சத்தமில்லாமல் இந்தியில் ஒரு படத்திற்கு பூஜைபோட்டுள்ளார் பாரதிராஜா."சீவலப்பேரி பாண்டி படத்தைத் தயாரித்தாரே பி.ஜி.ஸ்ரீகாந்த். அவர்தான் இந்த இந்திபடத்தை தயாரிக்கிறாராம்.படத்தில் ஹீரோ நானா படேகர். இசை உமேஷ், பாலு மகேந்திராவின் உதவியாளரானராம சுப்பிரமணியன்தான் படத்துக்கு வசனம் எழுதுகிறாராம்.தன் லட்சியப் படமாக பாரதிராஜா அடிக்கடி சொல்லுவது குற்றப் பரம்பரை. அதில்நடிக்க விக்ரமிடம் கால்ஷீட்டும் வாங்கி வைத்துவிட்டார் பாரதிராஜா. அதற்கு முன் இந்இந்திப் படைப்பில் இறங்குகிறார். இந்த இந்திப் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தது யார் தெரியுமோ? குற்றப்பரம்பரை ஹீரோ விக்ரமே தான்.இந்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு இப்போதைக்கு "பாரதிராஜாஸ் சினிமாஎன்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள். விரைவில் தலைப்பு மாறலாம் என்கிறார்கள்.இதில் நானா படேகர் இயக்குனராக நடிக்கிறார். அவர் சூட்டிங் நடத்தும் செட்டில்நடிகை ஒருவர் கொல்லப்பட அதை வைத்தே நகர்கிறது சினிமா. இது ஒரு த்ரில்லர்படமாக இருக்குமாம்.இந்தி மாடல்களான சரீனா, ரூபானி கங்குலி ஆகியோரை ஹீரோயின்களாகஅறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் இமயம். இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்த வருடம் விக்ரமை வைத்து குற்றபரம்பரைபடத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா.இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு இளையாராஜாவும், பாரதிராஜாவும் கை கோர்க்கப்போகிறார்களாம். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது பிரைமலைக் கள்ளர்எனப்படும் தேவர் சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள்.அவர்களை குற்றப் பரம்பரை என்று அறிவித்து ஆங்கிலேயர்கள் செய்தஅட்டூழியங்களையே கதைக் களமாக்கப் போகிறார் பாரதிராஜா.வலி மிகுந்த ஒரு சமூகப் போராட்டத்தை கேமராவில் உயிர் கொடுக்கப் போகிறார்பாரதிராஜா.மண், இனம், வலி சார்ந்த கதைகள் சொல்வதில் பாரதிராஜாவை அசைக்க ஆளுண்டா?

    By Staff
    |

    என் இனிய தமிழ் மக்களே..

    என தன் கம்பீரக் குரலாலும் உயிரோட்டக் கதைகளாலும் தமிழ் சினிமாவை ஆண்டமுடிசூடா மன்னன் பாரதிராஜா முதன்முதலாய் இந்தியில் காலடி எடுத்து வைக்கிறார்.


    ஆர்ப்பாட்டம் இல்லாமல், சத்தமில்லாமல் இந்தியில் ஒரு படத்திற்கு பூஜைபோட்டுள்ளார் பாரதிராஜா.

    "சீவலப்பேரி பாண்டி படத்தைத் தயாரித்தாரே பி.ஜி.ஸ்ரீகாந்த். அவர்தான் இந்த இந்திபடத்தை தயாரிக்கிறாராம்.

    படத்தில் ஹீரோ நானா படேகர். இசை உமேஷ், பாலு மகேந்திராவின் உதவியாளரானராம சுப்பிரமணியன்தான் படத்துக்கு வசனம் எழுதுகிறாராம்.

    தன் லட்சியப் படமாக பாரதிராஜா அடிக்கடி சொல்லுவது குற்றப் பரம்பரை. அதில்நடிக்க விக்ரமிடம் கால்ஷீட்டும் வாங்கி வைத்துவிட்டார் பாரதிராஜா. அதற்கு முன் இந்இந்திப் படைப்பில் இறங்குகிறார்.


    இந்த இந்திப் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தது யார் தெரியுமோ? குற்றப்பரம்பரை ஹீரோ விக்ரமே தான்.

    இந்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு இப்போதைக்கு "பாரதிராஜாஸ் சினிமாஎன்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள். விரைவில் தலைப்பு மாறலாம் என்கிறார்கள்.

    இதில் நானா படேகர் இயக்குனராக நடிக்கிறார். அவர் சூட்டிங் நடத்தும் செட்டில்நடிகை ஒருவர் கொல்லப்பட அதை வைத்தே நகர்கிறது சினிமா. இது ஒரு த்ரில்லர்படமாக இருக்குமாம்.

    இந்தி மாடல்களான சரீனா, ரூபானி கங்குலி ஆகியோரை ஹீரோயின்களாகஅறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் இமயம்.


    இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்த வருடம் விக்ரமை வைத்து குற்றபரம்பரைபடத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா.

    இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு இளையாராஜாவும், பாரதிராஜாவும் கை கோர்க்கப்போகிறார்களாம். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது பிரைமலைக் கள்ளர்எனப்படும் தேவர் சமூகத்தின் ஒரு பிரிவு மக்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள்.

    அவர்களை குற்றப் பரம்பரை என்று அறிவித்து ஆங்கிலேயர்கள் செய்தஅட்டூழியங்களையே கதைக் களமாக்கப் போகிறார் பாரதிராஜா.

    வலி மிகுந்த ஒரு சமூகப் போராட்டத்தை கேமராவில் உயிர் கொடுக்கப் போகிறார்பாரதிராஜா.

    மண், இனம், வலி சார்ந்த கதைகள் சொல்வதில் பாரதிராஜாவை அசைக்க ஆளுண்டா?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X