ஆட்டோகிராப் பார்த்து தூக்கம் போச்சு: பாரதிராஜா ஆட்டோகிராப் படம் பார்த்து விட்டு எனக்கு அஞ்சு நாட்கள் தூக்கம் போச்சு. சேரனைப் பார்த்து பயந்து போனேன் என்றுஅவருக்குப் புகழாரம் சூட்டினார் இயக்குனர் பாரதிராஜா.நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள கண்ட நாள் முதல் படத்தின் கேசட் வெளியீடு சென்னையில் நடந்தது. நடிகர்கள் விஜய்,சூர்யா, திரிஷா, லைலா ஆகியோர் கேசட்டுகளை வெளியிட்டனர்.இதே நிகழ்ச்சியின் போது தேசிய விருது பெற்ற தமிழக கலைஞர்களான இயக்குனர் சேரன், பாடகி சித்ரா, பாடலாசிரியர்பா.விஜய், நடிகர்கள் பிரபுதேவா, குட்டி, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இசையமைப்பாளர் வித்யாசாகர் உள்ளிட்டோருக்குபாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.இயக்குனர்கள் பாரதிராஜா, கேயார், ரமணா, பாலா, கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் விஜய், சூர்யா, நடிகை திரிஷா உள்ளிட்டோர்பாராட்டிப் பேசினர்.பாரதிராஜா பேசுகையில், நான் முன்பு மணிரத்தினத்தை மட்டுமே பார்த்துப் பயந்தேன். நாயகன் படம் பார்த்து விட்டு பலநாட்கள் எனக்கு தூக்கமில்லை. அதன் பிறகு நான் பயந்தது சேரனைப் பார்த்துத் தான். அவரது ஆட்டோகிராப் படம் பார்த்தபிறகு எனக்கு ஐந்து நாட்களாக தூக்கமே வரவில்லை.நடிகர் பிரகாஷ் ராஜை எனக்குப் பிடிக்கும். காரணம் அவரது பக்குவம், முதிர்ச்சி. கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும், தமிழர்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர், அளவற்ற பற்றுகொண்டவர், நல்ல இலக்கியவாதி, அறிவாளி.இந்த பிரகாஷ் தவிர, கமல்ஹாசன், பார்த்திபன் இவர்கள் மூன்று பேருமே ஞானக் கிறுக்கர்கள். எதையாவது தேடிக் கொண்டேஇருப்பார்கள் என்றார் பாரதிராஜா.
ஆட்டோகிராப் படம் பார்த்து விட்டு எனக்கு அஞ்சு நாட்கள் தூக்கம் போச்சு. சேரனைப் பார்த்து பயந்து போனேன் என்றுஅவருக்குப் புகழாரம் சூட்டினார் இயக்குனர் பாரதிராஜா.
நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள கண்ட நாள் முதல் படத்தின் கேசட் வெளியீடு சென்னையில் நடந்தது. நடிகர்கள் விஜய்,சூர்யா, திரிஷா, லைலா ஆகியோர் கேசட்டுகளை வெளியிட்டனர்.
இதே நிகழ்ச்சியின் போது தேசிய விருது பெற்ற தமிழக கலைஞர்களான இயக்குனர் சேரன், பாடகி சித்ரா, பாடலாசிரியர்பா.விஜய், நடிகர்கள் பிரபுதேவா, குட்டி, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இசையமைப்பாளர் வித்யாசாகர் உள்ளிட்டோருக்குபாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
இயக்குனர்கள் பாரதிராஜா, கேயார், ரமணா, பாலா, கே.எஸ்.ரவிக்குமார், நடிகர்கள் விஜய், சூர்யா, நடிகை திரிஷா உள்ளிட்டோர்பாராட்டிப் பேசினர்.
பாரதிராஜா பேசுகையில், நான் முன்பு மணிரத்தினத்தை மட்டுமே பார்த்துப் பயந்தேன். நாயகன் படம் பார்த்து விட்டு பலநாட்கள் எனக்கு தூக்கமில்லை. அதன் பிறகு நான் பயந்தது சேரனைப் பார்த்துத் தான். அவரது ஆட்டோகிராப் படம் பார்த்தபிறகு எனக்கு ஐந்து நாட்களாக தூக்கமே வரவில்லை.
நடிகர் பிரகாஷ் ராஜை எனக்குப் பிடிக்கும். காரணம் அவரது பக்குவம், முதிர்ச்சி. கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும், தமிழர்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர், அளவற்ற பற்றுகொண்டவர், நல்ல இலக்கியவாதி, அறிவாளி.
இந்த பிரகாஷ் தவிர, கமல்ஹாசன், பார்த்திபன் இவர்கள் மூன்று பேருமே ஞானக் கிறுக்கர்கள். எதையாவது தேடிக் கொண்டேஇருப்பார்கள் என்றார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications