twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருதும் பவதாரணியும்! இசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரணி, ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பாடியிருக்கும் காற்றில் வரும்கீதமே பாட்டுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கோலிவுட்டில் பலமாக பேசப்படுகிறது. அத்தனைஅழகாக வந்துள்ளது அந்தப் பாடலின் இசையும், பவாவின் பாவமும்.இளையராஜாவின் இரு புதல்வர்களும் தந்தையின் வழியில் இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மகள்பவதாரணியோ பாட்டுக்கு வந்து விட்டார்.அப்பாவைப் போலவே இசைஞானம் கொண்டுள்ள பவதாரணிக்கு பாடுவது பிடித்திருப்பதால், அதிலும்அப்பாவின் இசையில் பாடுவது ரொம்பவே பிடித்திருப்பதால் இசையமைக்கும் வாய்ப்புகளை விட பாடும்வாய்ப்புகளைத்தான் அதிகம் விரும்புகிறார்.பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுக்கு, தேசிய விருது பெற்று அப்பாவுக்குபெருமை சேர்த்தார். இப்போது இன்னொரு விருதுக்கு அவர் குறி வைத்துள்ளார்.பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பவதாரணிபாடியுள்ள காற்றில் வரும் கீதமே பாடல் சூப்பர் ஹிட் பாட்டாக மாறியுள்ளது.மிகுந்த பாவத்துடன் பவதாரணி பாடியுள்ள இப்பாட்டுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்றுஇன்டஸ்ட்ரியில் பலமான பேச்சு கிளம்பியுள்ளது.இதுகுறித்து பவதாரணி என்ன நினைக்கிறார்? என்று அவரிடமே கேள்வியைப் போட்டோம்,பவதாரிணி சொன்னது:விருது கிடைக்கிறதோ, இல்லையோ, ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதற்கு இசையமைத்தஇசையமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் பாட்டை பாடி முடித்தவுடன், அப்பாஎன்னைப் பார்த்து புன்னகைத்தார். அதில் ஒரு மகா திருப்தி, பெரும் சந்தோஷம், அதையும் தாண்டிய பெருமிதம்தெரிந்தது.அதுவே விருது கிடைத்தது போலத்தான். அதை விட திருப்தி ஒரு பாடகிக்கு இருக்க முடியாது.காற்றில் வரும் கீதமே பாட்டை மிகவும் ரசித்து, லயித்துப் போய் பாடினேன். பாடல் வரிகளும், ட்யூனும்அவ்வளவு அற்புதமாக வந்திருந்தன. விருது கிடைத்தால் கூடுதல் சந்தோஷம் என்கிறார் புன்னகையுடன்.இசைக்குயில் பவதாரணிக்கு மதுரையைச் சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் சமீபத்தில் சென்னையில்நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் அப்பாவின் இசையில் தொடர்ந்து பாடப்போவதாக பவதாரணி கூறுகிறார்.

    By Staff
    |

    இசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரணி, ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பாடியிருக்கும் காற்றில் வரும்கீதமே பாட்டுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கோலிவுட்டில் பலமாக பேசப்படுகிறது. அத்தனைஅழகாக வந்துள்ளது அந்தப் பாடலின் இசையும், பவாவின் பாவமும்.

    இளையராஜாவின் இரு புதல்வர்களும் தந்தையின் வழியில் இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மகள்பவதாரணியோ பாட்டுக்கு வந்து விட்டார்.

    அப்பாவைப் போலவே இசைஞானம் கொண்டுள்ள பவதாரணிக்கு பாடுவது பிடித்திருப்பதால், அதிலும்அப்பாவின் இசையில் பாடுவது ரொம்பவே பிடித்திருப்பதால் இசையமைக்கும் வாய்ப்புகளை விட பாடும்வாய்ப்புகளைத்தான் அதிகம் விரும்புகிறார்.

    பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுக்கு, தேசிய விருது பெற்று அப்பாவுக்குபெருமை சேர்த்தார். இப்போது இன்னொரு விருதுக்கு அவர் குறி வைத்துள்ளார்.

    பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பவதாரணிபாடியுள்ள காற்றில் வரும் கீதமே பாடல் சூப்பர் ஹிட் பாட்டாக மாறியுள்ளது.

    மிகுந்த பாவத்துடன் பவதாரணி பாடியுள்ள இப்பாட்டுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்றுஇன்டஸ்ட்ரியில் பலமான பேச்சு கிளம்பியுள்ளது.

    இதுகுறித்து பவதாரணி என்ன நினைக்கிறார்? என்று அவரிடமே கேள்வியைப் போட்டோம்,

    பவதாரிணி சொன்னது:


    விருது கிடைக்கிறதோ, இல்லையோ, ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதற்கு இசையமைத்தஇசையமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் பாட்டை பாடி முடித்தவுடன், அப்பாஎன்னைப் பார்த்து புன்னகைத்தார். அதில் ஒரு மகா திருப்தி, பெரும் சந்தோஷம், அதையும் தாண்டிய பெருமிதம்தெரிந்தது.

    அதுவே விருது கிடைத்தது போலத்தான். அதை விட திருப்தி ஒரு பாடகிக்கு இருக்க முடியாது.

    காற்றில் வரும் கீதமே பாட்டை மிகவும் ரசித்து, லயித்துப் போய் பாடினேன். பாடல் வரிகளும், ட்யூனும்அவ்வளவு அற்புதமாக வந்திருந்தன. விருது கிடைத்தால் கூடுதல் சந்தோஷம் என்கிறார் புன்னகையுடன்.

    இசைக்குயில் பவதாரணிக்கு மதுரையைச் சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் சமீபத்தில் சென்னையில்நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் அப்பாவின் இசையில் தொடர்ந்து பாடப்போவதாக பவதாரணி கூறுகிறார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X