»   »  லொடலொட பாவனா, கடகட கார்த்திகா

லொடலொட பாவனா, கடகட கார்த்திகா

Subscribe to Oneindia Tamil

பாவனாவும், அவரது கேரளத்து தோஸ்தான நடிகை கார்த்திகாவும் சேர்ந்து பேசஆரம்பித்தால் பக்கத்தில் இருப்பவர்கள் ஏ நிப்பாட்டு என்று கத்திக் களேபரம்செய்யும் அளவுக்கு நான் ஸ்டாப்பாக பேசிக் கொண்டிருப்பார்களாம்.

பாவனா மலையாளத்தில் பிசியாக இருந்து தமிழுக்கு வந்தவர். கார்த்திகாவும்அப்படியே. அங்கு சில படங்களில் நடித்துள்ள கார்த்திகா, புலன் விசாரணை-2 படம்மூலம் தமிழுக்கு வருகிறார்.

மலையாளத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்களாம். பாவான சரியான லொடலொட டைப். வாயைத் திறந்தால் அவ்வளவு சுலபமாக மூட முடியாது. அப்படி ஒருவாயாடி.

கார்த்திகாவும் அப்படித்தானாம். சரியான செட்டு கிடைத்து விட்டால் போதும், மைக்செட் கட்டாத குறையாக பேசித் தள்ளி விடுவாராம். இப்படிப்பட்டவர்கள் நண்பிகள்ஆனால் எப்படி இருக்கும்?

உள்ளூர் டாப்பிக் முதல் உலக மேட்டர்கள் வரை அலசித் தள்ளி விடுவார்களாம்பேசும் வாய்ப்பு கிடைத்தால். சக நடிகைகள் குறித்த பேச்சுதான் முக்கியமாகஇருக்குமாம். தங்களைப் பற்றி வரும் வதந்திகள், சக நடிகர், நடிகைகள் குறித்தவதந்திகளையும் பேசி மகிழ்வார்களாம்.

திரையுலகில் இரண்டு நடிகைகள் நெருங்கிய தோழிகளாக இருப்பது அபூர்வமானவிஷயம். ஆனால் கார்த்திகாவும், பாவனாவும் ரொம்ப ரொம்ப தோழமையாகஇருப்பதை பொறமையோடு பார்க்கிறார்கள் மலையாள மற்றும் தமிழ்சினிமாக்காரர்கள்.

சில நாட்களுக்கு முன்பு பாவனா தனது செல்போனில் கார்த்திகாவுடன் பேசஆரம்பித்தாராம். நிப்பாட்டுவார், நிப்பாட்டுவார் என அவரது அம்மா ரொம்பநேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் செல்லை காதிலிருந்து எடுப்பதுபோலவே தெரியவில்லை.

பில்லை நினைத்துப் பயந்து போன பாவனாவின் அம்மா இனிமேல் யாருடன்பேசுவதாக இருந்தாலும் தயவு செய்து லேண்ட்லைனில் பேசம்மா, செல்லுலவேண்டாம் என்று கன்னத்தைத் தடவி கேட்டுக் கொண்டாராம்.

மேலும், நீ பாட்டுக்கு செல்லில் இவ்வளவு நேரம் பேசியதை வைத்து, ஏதாவது கிசுகிசுகிளம்பிடப் போகுது என்றும் பாவனாவை எச்சரித்தாராம். இதனால் தற்போதுஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் லேண்ட் லைனில்தான் (செலவு எல்லாம்தயாரிப்பாளர் தலையில்!) பேசுகிறாராம் பாவனா.

பாவனாவைப் போலவே கார்த்திகாவும் ஓவர் கிளாமராக நடிக்க மாட்டேன் என்றபாலிசியைக் கொண்டவராம். இருப்பினும் படத்திற்குத் தேவையாக இருந்தால்கிளாமர் காட்ட ரெடிதான் என்றும் கூறுகிறார். புலன் விசாரணை-2 படம் தனக்குதமிழில் நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்றும் நம்புகிறார் கார்த்தி.

லொட லொடன்னு இப்படிப் பேசுகிறார்களே, வாய் வலிக்காதா, காது கிழியாதா என்னஎன்று பிற நடிகைகள் கடுப்போடு பற்களை நரநரக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil