»   »  அழகான ஆட்டோ ஓட்டி!

அழகான ஆட்டோ ஓட்டி!

Subscribe to Oneindia Tamil

அழகான பாவனா, அம்சமாக ஆட்டோ ஓட்டக் கற்று வருகிறார்.

சித்திரம் பேசுதடி பாவனா இப்போது கோலிவுட்டின் பிசி நடிகை. அவர் நடித்த சித்திரம்பேசுதடி, கிழக்குக் கடற்கரைச் சாலை, வெயில் ஆகிய படங்களில் கி.க.சாலை தவிரமற்ற 2 படங்களும் சூப்பர் ஹிட் ஆனதில் பெருத்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் பாவ்.

இந்த மகிழ்ச்சியுடனேயே கூடல் நகர் படத்தில் படு ஜாலியாக நடித்து வருகிறார்.இதுவும் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை பாவனாவுக்கு நிறையவே இருக்கிறதாம்.

சந்தோஷமாக இருக்கிறதா என்று பாவனாவிடம் கேட்டால், ரொம்ப சந்தோஷமாகஇருக்கிறேன். நான் நடித்த மூன்று படங்களில் இரண்டு வெற்றி பெற்றது ஒருசந்தோஷம். கை நிறையப் படங்கள் இருப்பது இரண்டாவது சந்தோஷம் என்றுபுன்னகை பூக்கிறார் பாவனா.

இப்போது நடித்து வரும் கூடல் நகர், தீபாவளி, ஆர்யா ஆகிய படங்களில் எனக்குநல்ல கேரக்டர்கள். நான் கடவுள் படத்தில் முற்றிலும் புதிய பாவனாவைப்பார்ப்பீர்கள். அதேபோல ராமேஸ்வரம் படத்திலும் எனக்கு அருமையான கேரக்டர்என்று அடுக்கினார் பாவனா.

2007ம் ஆண்டு எனது ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன். போன ஆண்டைப்போல இந்த ஆண்டும் சூப்பர் கேரக்டர்களாகத் தேர்வு செய்து நடிப்பேன் என்றுபொரிந்து தள்ளிய பாவனாவை ஸ்டாப் செய்து, சைட் பை சைடாக மளையாளத்திலும்நடிக்கிறீர்கள் போலிருக்கே?

அங்கிருந்துதானே இங்கு வந்தேன்? ஸோ, அதையும் விட முடியாது இல்லியா!மோகன் லாலுடன் சோட்டா மும்பை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் நான்ஆட்டோ டிரைவராக வருகிறேன். இதற்காக நானே ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொண்டேன்.

சிவன் என்பவர்தான் எனக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொடுத்தார். பரவாயில்லை,நான் நன்றாகவே ஆட்டோ ஓட்டுகிறேன். விட்டால் கேரள தெருக்களைஆட்டோவிலையே ஒரு ரவுண்டு அடித்திருப்பேன் என்று தெத்துப் பல் தெரியகுலுங்கிச் சிரித்தார் பாவனா.

அழகான சவாரிக்கு பாவனா ரெடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil