twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் தரும் பணம் தமிழில் நடித்தால்தான் நிறையப் பணம் கிடைக்கும், பிளஸ் புகழ் கிடைக்கும். இதனால்தான் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டேன். அது இப்போ ரொம்ப உதவியாக இருக்கு என்று கேரள விவரமாக பேசுகிறார் சித்திரம் பேசுதடி பாவனா. லேட்டஸ்ட் கேரள வரவான பாவனா, ரொம்ப ரொம்ப வெவரமாக இருக்கிறார். வெளிமாநில நடிகைகளின் வேட்டைக் காடாக தமிழ் சினிமாக மாறி ரொம்ப காலமாகிறது. எல்லா நடிகைகளும் இங்கு வந்த பின்னர்தான் தமிழில் பேசக் கற்றுக் கொள்வார்கள். உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை உள்ளவர்கள் நன்றாகப் பேச முயற்சிப்பார்கள், எழுதப் படிக்கக் கூட கற்றுக் கொள்வார்கள். சிலரோ, பேசத் தெரிஞ்சா போதும் என்று அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். டப்பு சேர்ந்ததும் சொந்த ஊருக்குப் போய் செட்டிலாகி விடுவார்கள். இதற்கு உதாரணம் சிம்ரன் போன்ற ரகத்தைச் சேர்ந்த நடிகைகள். சமீபத்திய கேரள வரவான பாவனா இதில் சற்று வித்தியாசப்படுகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே கஷ்டப்பட்டுத் தமிழ் கற்றுக் கொண்டாராம் இந்த சித்திரப் பாவை. அடடே ஆச்சரியமா இருக்கே என்று பாவாவைப் பாராட்டப் போனபோது, தமிழ் சினிமாவில்தான் நிறையப் பணம் கிடைக்கும், புகழ் கிடைக்கும். அதனால்தான் மலையாளத்தில் பிசியாக இருந்தபோதும், கஷ்டப்பட்டு தமிழ் பேச கற்றுக் கொண்டேன். இப்போது நன்றாகத் தமிழ் பேசுகிறேன் இல்லையா என்று உண்மையை நெத்தியடியாகச் சொல்லி ஒப்புக் கொண்டார். பார்ட்டி இப்போது மதுரையில் கேம்ப் அடித்துள்ளார். வெயில் படத்திற்காக அங்கு முகாமடித்துள்ள பாவனாவிடம், மதுரை வெயில் சுடலையா என்று கூல்ட்ரிங் கொடுத்து கூல்படுத்தியவாறு கேட்டோம். அய்யோ, எனக்கு மதுரை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா, இந்த ஊர் ரசிகர்கள் யாரை ஆதரிக்கிறாங்களோ, அவங்கதான் டாப்புக்கு வருவாங்களாமே, கேள்விப்பட்டிருக்கேன். என்னையும் ஆதரிச்சா நல்லாருக்கும் என்று மதுரைக்கு ஐஸ் வைத்தார். சித்திரம் பேசுதடி எனக்கு தமிழில் முதல் படம் என்றாலும் என்னோட முதல் சினிமாப் படம் நம்மள் என்ற மலையாளப் படம்தான். ஒன்னு தெரியுமோ? அந்தப் படத்தில் நான் தமிழ் பேசி நடித்தேன்!

    By Staff
    |
    தமிழில் நடித்தால்தான் நிறையப் பணம் கிடைக்கும், பிளஸ் புகழ் கிடைக்கும். இதனால்தான் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக் கொண்டேன். அது இப்போ ரொம்ப உதவியாக இருக்கு என்று கேரள விவரமாக பேசுகிறார் சித்திரம் பேசுதடி பாவனா.

    லேட்டஸ்ட் கேரள வரவான பாவனா, ரொம்ப ரொம்ப வெவரமாக இருக்கிறார். வெளிமாநில நடிகைகளின் வேட்டைக் காடாக தமிழ் சினிமாக மாறி ரொம்ப காலமாகிறது. எல்லா நடிகைகளும் இங்கு வந்த பின்னர்தான் தமிழில் பேசக் கற்றுக் கொள்வார்கள்.

    உண்மையிலேயே தமிழ் மீது அக்கறை உள்ளவர்கள் நன்றாகப் பேச முயற்சிப்பார்கள், எழுதப் படிக்கக் கூட கற்றுக் கொள்வார்கள்.

    சிலரோ, பேசத் தெரிஞ்சா போதும் என்று அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். டப்பு சேர்ந்ததும் சொந்த ஊருக்குப் போய் செட்டிலாகி விடுவார்கள். இதற்கு உதாரணம் சிம்ரன் போன்ற ரகத்தைச் சேர்ந்த நடிகைகள்.

    சமீபத்திய கேரள வரவான பாவனா இதில் சற்று வித்தியாசப்படுகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே கஷ்டப்பட்டுத் தமிழ் கற்றுக் கொண்டாராம் இந்த சித்திரப் பாவை.

    அடடே ஆச்சரியமா இருக்கே என்று பாவாவைப் பாராட்டப் போனபோது, தமிழ் சினிமாவில்தான் நிறையப் பணம் கிடைக்கும், புகழ் கிடைக்கும். அதனால்தான் மலையாளத்தில் பிசியாக இருந்தபோதும், கஷ்டப்பட்டு தமிழ் பேச கற்றுக் கொண்டேன்.

    இப்போது நன்றாகத் தமிழ் பேசுகிறேன் இல்லையா என்று உண்மையை நெத்தியடியாகச் சொல்லி ஒப்புக் கொண்டார்.

    பார்ட்டி இப்போது மதுரையில் கேம்ப் அடித்துள்ளார். வெயில் படத்திற்காக அங்கு முகாமடித்துள்ள பாவனாவிடம், மதுரை வெயில் சுடலையா என்று கூல்ட்ரிங் கொடுத்து கூல்படுத்தியவாறு கேட்டோம்.

    அய்யோ, எனக்கு மதுரை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா, இந்த ஊர் ரசிகர்கள் யாரை ஆதரிக்கிறாங்களோ, அவங்கதான் டாப்புக்கு வருவாங்களாமே, கேள்விப்பட்டிருக்கேன். என்னையும் ஆதரிச்சா நல்லாருக்கும் என்று மதுரைக்கு ஐஸ் வைத்தார்.

    சித்திரம் பேசுதடி எனக்கு தமிழில் முதல் படம் என்றாலும் என்னோட முதல் சினிமாப் படம் நம்மள் என்ற மலையாளப் படம்தான். ஒன்னு தெரியுமோ? அந்தப் படத்தில் நான் தமிழ் பேசி நடித்தேன்! அதாவது பரிமளம் என்ற தமிழ்ப் பெண்ணாக அப்படத்தில் எனக்கு கேரக்டர்.

    முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து முன்னணி நடிகர்களான மம்மூட்டி, திலீப், மோகன்லால், பிருத்விராஜ் என நிறையப் பேருடன் நடித்து விட்டேன்.

    மூத்த நடிகர்கள், இளைய நடிகர்கள் என்று நான் பார்ப்பதில்லை. (டப்பு வந்தா சரியோ) நல்ல கேரக்டராக இருக்க வேண்டும், நடிக்க வாய்ப்பு இருக்க வேண்டும் (ஓ.. அப்படியா?).

    அப்படி இருந்தால் யார் ஹீரோவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை.

    அப்படித்தான் சித்திரம் பேசுதடி படத்தையும் ஒத்துக் கொண்டேன். இதோ இன்று நீங்கள் எல்லோரும் என்னைப் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

    இப்போது ஆர்யா படத்திலும் எனக்கு ரெளடித்தனமான கேரக்டர். மாதவன் சாரே என்னோட நடிப்பைப் பார்த்து விட்ட அசந்து போனார். அதற்கு நேர் மாறான கேரக்டர் வெயில் படத்தில்.

    மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரொம்ப சாதுவான பொண்ணாக வருகிறேன்.

    கிளாமர் செய்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஓவராக இருக்கக் கூடாது.. (அப்படின்னா?) என்றார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X