For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாவனாவின் மல்லுக்கட்டு! கவர்ச்சி காட்டவே மாட்டேன், கிளமராக டிரஸ் போடவே மாட்டேன் என்று மல்லுவுட்நாயகி பாவனா சமீபத்தில் ஒரு ஷூட்டிங்கில் மல்லுக்கட்டியுள்ளார்.கேரளாவிலிருந்து வரிசையாக கோலிவுட்டில் குதித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில்சிலர் எடுத்தவுடனேயே டாப் கியரில் கிளாமர் புயலைக் கிளப்புவார்கள். சிலரோ,ஆரம்பத்தில் குத்துவிளக்கு ரோல்களில் நடித்து பின்னர் தெருவிளக்கு ரேஞ்சுக்குஇறங்கி வருவார்கள். ஆடைகளையும் இறக்கமாக அணிவார்கள். நயனதாரா முதலில் படு லட்சணமாகவந்து போனார். ஐயாவில் அம்சமாக இருந்த அவர் சந்திரகியில் கொஞ்சம் போலகிளாமராக தெரிந்தார். கள்வனின் காதலி, கஜினியில் கிளாமருக்குள் மூழ்கிப் போனார்.இப்போது சிம்புவுடன் உதட்டுக் கடி போஸ் கொடுக்கும் அளவுக்கு துணிந்து விட்டார்.தெலுங்கிலும் கிளாமர் கடலில் குதிக்கப் போகிறாராம். கோபிகாவும் அப்படித்தான். வந்த புதிதில் இடுப்பு மடிப்பு கூட தெரியாமல் நடித்தார்.ஆனால் ஸ்ரீகாந்த்துடன் செம கிளுகிளுப்பாக அவர் நடித்தபோது எல்லோரும்கோபிகாவின் வனப்பைப் பார்த்து மலைத்துப் போனார்கள். ஆனால் அவரது கிளாமருக்கு வரவேற்பு கிடைக்காததால், மலையாளத்துக்கேத்திரும்பிப் போய் விட்டார். ரேணுகா மேனனும் கலாபக் காதலனில்கிளுகிளுப்பூட்டினார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நடிப்பில் மெய் மறகக்வைத்த நவ்யா நாயர், அமிர்தம் படத்தில் அரை குறை ஆடைகளுடன் வந்து சிலிர்க்கவைத்தார். இப்படி சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் நடிகைகள் மத்தியில்பாவனா கொஞ்சம் வித்தியாசமானவராக தெரிகிறார். கிளாமர் காட்டுவதில்லைஎன்பதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்துள்ளார் போல. சமீபத்தில் ஒருபடத்தின் ஷூட்டிங் நடந்தது. அந்தக் காட்சியில் கிளாமராக பாவனாவை காட்டஇயக்குநர் முடிவு செய்தார். படத்தில் ஒத்துக் கொள்ளும்போதே, கிளாமர் காட்ட மாட்டேன் என்று கண்டிஷனாகபாவனா கூறியிருந்ததால், இந்தக் காட்சியைப் பற்றி எப்படி அவரிடம் சொல்வதுஎன்று இயக்குநர் ரொம்ப நேரம் யோசித்து வேறு வழியின்றி காட்சியை விளக்கினார். இதைக் கேட்டதும் பாவனா பதில் ஏதும் சொல்லவில்லை. சேரை விட்டு எழுந்து தனதுகேரவன் வேனுக்குப் போனார். சரி, டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு வரத்தான்போகிறார் என்று இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க,கேரவனுக்குள் போன பாவனா விருட்டென்று அதை கிளப்பிக் கொண்டு ஸ்பாட்டைவிட்டே போய் விட்டார். வியர்த்துப் போன இயக்குநர், பாவானாவை செல்லில் தொடர்பு கொண்டுஎன்னாச்சுங்க, ஏன் போயிட்டீங்க என்று கட்டுள்ளார். அதற்கு பாவனா, கிளாமர்காட்ட முடியாது என்று சொல்லியும் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்கக் கூறுகிறீர்கள். இதுபோன்ற காட்சிகள் இருக்காது என்று என்னிடம் உறுதியாக சொன்னால்தான்மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார் பாவனா. கடுப்பாகிப் போன இயக்குநர், வேறு வழியின்றி தனது கடுப்பை மனதுக்குள்கரைத்துக் கொண்டு, சரி இனிமேல் இப்படி இருக்காது, வாங்க என்று கூறியுள்ளார். இதன் பிறகே வேனை ஒரு யூ டர்ன் போட்டு மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தாராம்பாவனா. கடைசியில் பாவனா நடிக்க வேண்டிய அந்த கவர்ச்சிக் காட்சியை வேறு ஒருநடிகையை வைத்து திருப்தியாக எடுத்து முடித்து சந்தோஷப்பட்டுக் கொண்டாராம்இயக்குநர். வீம்பும், வைராக்கியம் எத்தனை நாட்களுக்கோ!

  By Staff
  |
  கவர்ச்சி காட்டவே மாட்டேன், கிளமராக டிரஸ் போடவே மாட்டேன் என்று மல்லுவுட்நாயகி பாவனா சமீபத்தில் ஒரு ஷூட்டிங்கில் மல்லுக்கட்டியுள்ளார்.

  கேரளாவிலிருந்து வரிசையாக கோலிவுட்டில் குதித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில்சிலர் எடுத்தவுடனேயே டாப் கியரில் கிளாமர் புயலைக் கிளப்புவார்கள். சிலரோ,ஆரம்பத்தில் குத்துவிளக்கு ரோல்களில் நடித்து பின்னர் தெருவிளக்கு ரேஞ்சுக்குஇறங்கி வருவார்கள்.

  ஆடைகளையும் இறக்கமாக அணிவார்கள். நயனதாரா முதலில் படு லட்சணமாகவந்து போனார். ஐயாவில் அம்சமாக இருந்த அவர் சந்திரகியில் கொஞ்சம் போலகிளாமராக தெரிந்தார். கள்வனின் காதலி, கஜினியில் கிளாமருக்குள் மூழ்கிப் போனார்.

  இப்போது சிம்புவுடன் உதட்டுக் கடி போஸ் கொடுக்கும் அளவுக்கு துணிந்து விட்டார்.தெலுங்கிலும் கிளாமர் கடலில் குதிக்கப் போகிறாராம்.

  கோபிகாவும் அப்படித்தான். வந்த புதிதில் இடுப்பு மடிப்பு கூட தெரியாமல் நடித்தார்.ஆனால் ஸ்ரீகாந்த்துடன் செம கிளுகிளுப்பாக அவர் நடித்தபோது எல்லோரும்கோபிகாவின் வனப்பைப் பார்த்து மலைத்துப் போனார்கள்.

  ஆனால் அவரது கிளாமருக்கு வரவேற்பு கிடைக்காததால், மலையாளத்துக்கேத்திரும்பிப் போய் விட்டார். ரேணுகா மேனனும் கலாபக் காதலனில்கிளுகிளுப்பூட்டினார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நடிப்பில் மெய் மறகக்வைத்த நவ்யா நாயர், அமிர்தம் படத்தில் அரை குறை ஆடைகளுடன் வந்து சிலிர்க்கவைத்தார்.

  இப்படி சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் நடிகைகள் மத்தியில்பாவனா கொஞ்சம் வித்தியாசமானவராக தெரிகிறார். கிளாமர் காட்டுவதில்லைஎன்பதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்துள்ளார் போல. சமீபத்தில் ஒருபடத்தின் ஷூட்டிங் நடந்தது. அந்தக் காட்சியில் கிளாமராக பாவனாவை காட்டஇயக்குநர் முடிவு செய்தார்.

  படத்தில் ஒத்துக் கொள்ளும்போதே, கிளாமர் காட்ட மாட்டேன் என்று கண்டிஷனாகபாவனா கூறியிருந்ததால், இந்தக் காட்சியைப் பற்றி எப்படி அவரிடம் சொல்வதுஎன்று இயக்குநர் ரொம்ப நேரம் யோசித்து வேறு வழியின்றி காட்சியை விளக்கினார்.

  இதைக் கேட்டதும் பாவனா பதில் ஏதும் சொல்லவில்லை. சேரை விட்டு எழுந்து தனதுகேரவன் வேனுக்குப் போனார். சரி, டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு வரத்தான்போகிறார் என்று இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க,கேரவனுக்குள் போன பாவனா விருட்டென்று அதை கிளப்பிக் கொண்டு ஸ்பாட்டைவிட்டே போய் விட்டார்.

  வியர்த்துப் போன இயக்குநர், பாவானாவை செல்லில் தொடர்பு கொண்டுஎன்னாச்சுங்க, ஏன் போயிட்டீங்க என்று கட்டுள்ளார். அதற்கு பாவனா, கிளாமர்காட்ட முடியாது என்று சொல்லியும் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்கக் கூறுகிறீர்கள்.

  இதுபோன்ற காட்சிகள் இருக்காது என்று என்னிடம் உறுதியாக சொன்னால்தான்மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார் பாவனா.

  கடுப்பாகிப் போன இயக்குநர், வேறு வழியின்றி தனது கடுப்பை மனதுக்குள்கரைத்துக் கொண்டு, சரி இனிமேல் இப்படி இருக்காது, வாங்க என்று கூறியுள்ளார்.

  இதன் பிறகே வேனை ஒரு யூ டர்ன் போட்டு மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தாராம்பாவனா. கடைசியில் பாவனா நடிக்க வேண்டிய அந்த கவர்ச்சிக் காட்சியை வேறு ஒருநடிகையை வைத்து திருப்தியாக எடுத்து முடித்து சந்தோஷப்பட்டுக் கொண்டாராம்இயக்குநர்.

  வீம்பும், வைராக்கியம் எத்தனை நாட்களுக்கோ!


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X