»   »  காமிகா ஆன பூமிகா!

காமிகா ஆன பூமிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போர்த்தி மட்டுமே நடித்து வந்து பூமிகா முதல் முறையாக மாயாபஜார் என்றதெலுங்குப் படத்தில் படு கிளாமராக நடித்து தெலுங்கு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

க்யூட் பேபி என்று பெயர் பெற்ற பூமிகா, வட நாட்டுப் பொண்ணானாலும் கூடதெலுங்கில்தான் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு பிரபலமான பின்னர்அப்படியே தமிழுக்கும் வந்தார். ஆனால் தமிழில் இவரது மார்க்கெட் நிலையாகஇல்லை.

அப்படியும், இப்படியுமாக ஊசலாடி வந்தது பூமிகாவின் தமிழ் மார்க்கெட். சமீபத்தில்வெளியான சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் காதலியாக வந்துஅசத்தியிருந்தார் பூமிகா.

பட வாய்ப்புகளைப் பிடிப்பதற்காக, கவர்ச்சி காட்டுவதில்லை என்ற தனதுகொள்கையை தளர்த்தாமல் இருந்து வந்த பூமிகா முதல் முறையாக கொள்கையைதூக்கி தூரப் போட்டுள்ளாராம.

மாயா பஜார் என்ற தெலுங்குப் படத்தில் பூமிகா நடித்துள்ளார். அவரது பெயரைகாமிகா என்று மாற்றி விடும் அளவுக்கு படு கிளாமராக நடித்துள்ளார் இப்படத்தில்.அட, பூமிகாவா இது என்று வியப்படையும் அளவுக்கு பூமிகாவின் கிளாமர் வியர்க்கவைக்கிறதாம்.

திடீர்னு ஏன் கிளாமர் என்று பூமிகா தரப்பைக் கேட்டால், வேண்டும் என்றே பூமிகாகிளாமரில் இறங்கவில்லை. கதைக்குத் தேவையானதாக இருந்ததால்தான் கிளாமர்ரோல் செய்தார். தொடர்ந்து இதேபோல செய்வார் என எதிர்பார்க்க முடியாதுஎன்கிறார்கள்.

பூமிகாவின் கிளாமர் ஆட்டத்தால், பல தயாரிப்பாளர்கள் சந்தோஷமடைந்துள்ளனராம்.இதோபோன்ற கதையுடன் போய் பூமிகாவை வளைத்து நடிக்க வைத்து விடலாம்என்ற நம்பிக்கைதான் இந்த சந்தோஷத்திற்குக் காரணம்.

தமிழிலும் இப்படி ஜில்லுன்னு நடிப்பாரான்னு தெரியலே...

Read more about: bhoomika does glamour role

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil