அம்மாவுடன் இணைந்து ரேம்ப் வாக் போன பிபாஷா பாசு

By Sudha

Bipasha Basu with her mom
ரேம்ப் வாக் நிகழ்ச்சிகளில் பிபாஷா பாசுவைப் பார்த்து அசந்தவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக மகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்தி விட்டார் பிபாஷாவின் தாயார் மமதா பாசு.

மும்பையில் சர்வதேச நகை வார விழா நடந்தது. இதில் பல பிரபலங்கள், நடிகைகள், மாடல்கள் கலந்து கொண்டு 'பூணை நடை' போட்டனர். அந்த நடைகளிலேயே அனைவரின் கண்களையும் அதிகம் கவர்ந்தது பிபாஷா பாசுவும், அவரது தாயார் மமதாவும்தான்.

முதல் முறையாக தனது தாயார் பூணை நடை போட்டுள்ளதாக பிபாஷா பெருமையுடன் மேடையில் கூறினார். தான் அழைத்ததற்கிணங்க, தனக்காக கொல்கத்தாவிலிருந்து மும்பை வந்துள்ளார் தனது தாயார் என்றும் அவர் கூறினார். அவருடன் இணைந்து ஜோடியாக நடந்தது பெரு்மையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது என்று பிபாஷா கூற, அருகில் நின்றிருந்த அவரது தாயார் வெட்கப் புன்னகை பூக்க அந்த இடமே படு குதூகலமாகி விட்டது.

சும்மா சொல்லக் கூடாது, பிபாஷாவை விட படு அழகாக காணப்பட்டார் மமதா பாசு. பிபாஷாமேலும் பேசுகையில், நமது நாட்டில் ஒரு தாய்க்கும், மகளுக்கும் உள்ள பந்தம் மிகவும் வலுவானது. பெண்களின் பலத்தை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கும் ஆலமரமாக பெண்கள்தான் திகழ்கிறார்கள்.

எனக்கு மூன்று சகோதரிகள். அத்தனை பேரும் எனக்கு மிகவும் பலமாக இருக்கிறார்கள். அதேபோல எங்களது பெற்றோரும், குறிப்பாக எனது தாயார் எங்கள் நால்வருக்கும் மிக மிக பேருதவியாக, பலமாக இருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.

உங்களது தாயார் முதல் முறையாக பூணை நடை போட்டது குறித்து என்ன சொன்னார் என்று பிபாஷாவுடன் கேட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. எனக்குத்தான் ரொம்பப் பதட்டமாகி விட்டது என்று கூறிச் சிரித்தார் பிபாஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X